அட்சய திருதியையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! 1 சவரன் ரூ.77,800-க்கு விற்பனை!

ஏப்ரல் 30-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்திருக்கிறது. இன்றைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் குவியும் என்பது நம்பிக்கை. மக்களும் இன்றைய தினம் தங்கம் வாங்கி பூஜை செய்து வீட்டில் வைத்திருப்பர்.

அட்சயா என்ற சொல்லுக்கு "என்றுமே குறையாதது" என்பது பொருள். இன்றைய தினம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். பொதுவாக தங்கத்திற்கு தேவை அதிகரித்தால் அன்றைய தினம் விலை உயரும். ஆனால் அதற்கு நேர் மாறாக அட்சய திருதியை நாளன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அட்சய திருதியையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! 1 சவரன் ரூ.77,800-க்கு விற்பனை!

இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ. 8975-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 40 குறைந்து ரூ. 71,800-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 50 குறைந்த ரூ. 89,750-க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படும். 22 கேரட் தங்கத்தோடு சில்வர், காப்பர் போன்ற உலோகங்கள் கலந்து தான் நகைகளாக வடிவமைக்க முடியும். ஏனெனில் தூய தங்கம் மிகவும் மிருதுவாக இருக்கும். இதை வளைத்து நகைகள் செய்யும் போது அவை தூளாக நொறுங்கி விடும். இதனால் தான் 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கமும், மீதமுள்ள சதவீதத்திற்கு காப்பர் அல்லது சில்வர் கலந்து நகைகளாக செய்யப்படும்.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 6 குறைந்து ரூ. 9,791-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.48 குறைந்து ரூ. 78,328-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 60 குறைந்தது ரூ. 97,910-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தில் 99.9% தூய தங்கம் இருக்கும். முன்பே சொன்னது போல் தங்கம் மிகவும் மிருதுவாக இருப்பதனால் இதை வைத்து நகைகளாக வாங்க முடியாது. வேண்டுமானால் கோல்ட் பார்கள், கோல்ட் காயின்கள் போன்றவற்றை வாங்கலாம்.

அட்சய திருதியை என்பதால் இன்றைய தினம் வெவ்வேறு நகரங்களில் வசிப்பவர்களும் தங்கம் வாங்கக்கூடும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் அந்தந்த ஊர்களில் அட்சய திருதியை கொண்டாடுவார்கள். இந்தப் பதிவில் வெவ்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71800 ரூபாய், மும்பை - 71800 ரூபாய், டெல்லி - 71920 ரூபாய், கொல்கத்தா - 71800 ரூபாய், பெங்களூர் - 71800 ரூபாய், ஹைதராபாத் - 71800 ரூபாய், கேரளா - 71800 ரூபாய், புனே - 71800 ரூபாய், பரோடா - 71840 ரூபாய், அகமதாபாத் - 71840 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,975 ரூபாய், மும்பை - 8,975 ரூபாய், டெல்லி - 8,990 ரூபாய், கொல்கத்தா - 8,975 ரூபாய், பெங்களூர் - 8,975 ரூபாய், ஹைதராபாத் - 8,975 ரூபாய், கேரளா - 8,975 ரூபாய், புனே - 8,975 ரூபாய், பரோடா - 8,980 ரூபாய், அகமதாபாத் - 8,980 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,791 ரூபாய், மும்பை - 9,791 ரூபாய், டெல்லி - 9,804 ரூபாய், கொல்கத்தா - 9,791 ரூபாய், பெங்களூர் - 9,791 ரூபாய், ஹைதராபாத் - 9,791 ரூபாய், கேரளா - 9,791 ரூபாய், புனே - 9,791 ரூபாய், பரோடா - 9,796 ரூபாய்,அகமதாபாத் - 9,796 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,434 ரூபாய், மும்பை - 7,344 ரூபாய், டெல்லி - 7,356 ரூபாய், கொல்கத்தா - 7,344 ரூபாய், பெங்களூர் - 7,344 ரூபாய், ஹைதராபாத் - 7,344 ரூபாய், கேரளா - 7,344 ரூபாய், புனே - 7,344 ரூபாய், பரோடா - 7,348 ரூபாய், அகமதாபாத் - 7,348 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,630 ரூபாய், மும்பை - 26,630 ரூபாய், டெல்லி - 26,630 ரூபாய், கொல்கத்தா - 26,630 ரூபாய், பெங்களூர் - 26,630 ரூபாய், ஹைதராபாத் - 26,630 ரூபாய், கேரளா - 26,630 ரூபாய், புனே - 26,630 ரூபாய், வதோதரா - 26,630 ரூபாய், அகமதாபாத் - 26,630 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,000 ரூபாய், மும்பை - 1,00,000 ரூபாய், டெல்லி - 1,00,000 ரூபாய், கொல்கத்தா - 1,00,000 ரூபாய், பெங்களூர் - 1,00,400 ரூபாய், ஹைதராபாத் - 1,09,000 ரூபாய், கேரளா - 1,09,000 ரூபாய், புனே - 1,00,000 ரூபாய், பரோடா - 1,00,000 ரூபாய், அகமதாபாத் - 1,00,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 38.10 - 8,598 ரூபாய்
குவைத் - KWD 30.45 - 8,456 ரூபாய்
மலேசியா - MYR 460 - 9,078 ரூபாய்
ஓமன் - OMR 39.15 - 8,651 ரூபாய்
கத்தார் - QAR 372 - 8,682 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 377 - 8,551 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 135 - 8,795 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 369 - 8,545 ரூபாய்
அமெரிக்கா - USD 100 - 8,508 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
துபாய் (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
புஜைரா (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 369 - 8,545 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 372 - 8,682 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.15 - 8,651 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 377 - 8,551 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.88 - 8,303 ரூபாய்
கனடா - CAD 142.50 - 8,767 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 161.90 - 8,834 ரூபாய்
நேபாளம் - NPR 14,899.77 - 9,318 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 40.70 - 9,185 ரூபாய்
குவைத் - KWD 33.22 - 9,225 ரூபாய்
மலேசியா - MYR 472 - 9,315 ரூபாய்
ஓமன் - OMR 41.85 - 9,248 ரூபாய்
கத்தார் - QAR 399.50 - 9,323 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 408 - 9,254 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 148.60 - 9,681 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 398.50 - 9,229 ரூபாய்
அமெரிக்கா - USD 106.75 - 9,082 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
துபாய் (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
புஜைரா (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 398.50 - 9,229 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 399.50 - 9,323 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 41.85 - 9,248 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 408 - 9,254 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.51 - 9,059 ரூபாய்
கனடா - CAD 150.50 - 9,259 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 176.70 - 9,641 ரூபாய்
நேபாளம் - NPR 16,195.41 - 10,128 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+