தமிழ்நாட்டின் வாரத்தின் இறுதி நாளான இன்று, வெள்ளிக்கிழமை ரீடைல் சந்தையில் தங்கம் விலை சரிவடைந்த நிலையில், வெள்ளி விலை லேசான உயர்வுடன் காணப்படுகிறது.
காலை 9:50 மணி நிலவரப்படி, MCX தங்கம் (அக்டோபர் 4) 0.10 சதவிகிதம் அல்லது ரூ. 75 குறைந்து 10 கிராமுக்கு ரூ. 69,633 ஆகவும், MCX வெள்ளி (செப்டம்பர் 5) சிறிய அளவிலான உயர்வுடன் அதாவது 0.17 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோ ரூ. 80,678 வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் சந்தை நிபுணர்களின் கருத்து என்ன..?

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆனந்த் ரதி கமோடிட்டிஸ் அண்ட் கரன்சீஸ் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப மற்றும் டெரவேட்டிவ் ஆராய்ச்சி ஆய்வாளர் நேகா குரேஷி தெரிவித்துள்ளார்.
நேகா குரேஷி கூறுகையில், "தங்கம் அக்டோபர் பியூச்சர்ஸ் 69,700 ரூபாய்க்கு குறையும் போது வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான ஸ்டாப் லாஸ் விலை 69,200 ரூபாய் மற்றும் டார்கெட் விலை 70,400 ரூபாய். வெள்ளி செப்டம்பர் பியூச்சர்ஸ் 80,700 ரூபாய்க்குக் குறையும் போது வாங்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான ஸ்டாப் லாஸ் விலை 79,700 ரூபாய் மற்றும் டார்கெட் விலை 82,700 ரூபாய்" என்றார்.
இதற்கிடையே, சர்வதேசச் சந்தையில் காமேக்ஸ் தங்கத்தின் விலை 0.10 சதவிகிதம் குறைந்து ஒரு அவுன்ஸ்க்கு 2,460.8 டாலராக உள்ளது.
மேலும் நேகா குரேஷி கூறுகையில் " அமெரிக்க மத்திய வங்கியின் செப்டம்பர் நாணய கொள்கை கூட்டத்தில் கூடுதல் வட்டி விகிதக் குறைப்பு குறித்த சந்தையின் எதிர்பார்ப்பு தங்கம் இந்த வார இறுதியில் உயர்வுடன் முடிவை எதிர்பார்க்கிறது. மேலும், தினசரி அளவில் தங்கம் விலை உயர்வடையத் தொடங்கியுள்ளன" என்று குரேஷி கூறினார்.
இதைத் தொடர்ந்து ஜியோஜிட் நிதி சேவைகளின் தலைமை சந்தை வல்லுநரான ஆனந்த் ஜேம்ஸ் பேசுகையில் "தங்கத்தின் மதிப்பு வியாழக்கிழமை ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது, இது பாதுகாப்பான முதலீடுகளுக்கான வலுவான தேவை மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி செப்டம்பரில் வட்டி விகிதத்தில் கணிசமான குறைப்பு செய்யும் என்ற அதிகரித்து வரும் எதிர்பார்ப்பால் ஊந்தப்பட்டு உள்ளது" என்று கூறினார்.
சர்வதேசச் சந்தையில் நேற்றைய 2 சதவிகித உயர்வின் பலனைத் தங்க விலை (XAU/USD) தக்கவைக்கப் போராடுவதால், வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் தங்கம் விலை சிறிய அளவிலான சரிவு காணப்படுகிறது. உலகளாவிய பங்கு சந்தைகளில் பொதுவாக வளர்ச்சி பாதையில் இருப்பதால், பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அழுத்தம் ஏற்படுத்துகிறது. இருப்பினும், சில காரணிகள் பெரும் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதலின் அச்சம் தங்கம் விலை உயர்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது, இதோடு ஃபெடரல் ரிசர்வ் (Fed) அதிகப்படியான வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்து வருகிறது.
இதற்கிடையே, பலவீனமான ஃபெடரல் ரிசர்வ்-ன் எதிர்பார்ப்புகள் அமெரிக்கா கருவூலப் பத்திரங்களின் வட்டி விகிதங்களுக்குத் தலைவலியாக உள்ளது மற்றும் அமெரிக்க டாலரை (USD) வியாழக்கிழமை தொட்ட வாராந்திர உச்சத்திலிருந்து இழுக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications