Gold Rate: புறப்பட்ட இடத்திற்கே வந்த தங்கம்.. ஏமாற்றம் தரும் வெள்ளி..!!

வார இறுதி நாளான சனிக்கிழமையான இன்று தங்கம் விலை லேசாக மாற்றம் அடைந்துள்ளது. சனிக்கிழமை என்பதால் இன்றைய விலைக்கு தான் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் தங்கம் விற்கப்படும். எனவே வீக் எண்டில் தங்கம், வெள்ளி வாங்கும் திட்டம் இருப்பவர்கள் விலை நிலவரங்களை தெரிந்து கொண்டு கடைக்கு செல்வது நல்லது.

சென்னையில் நேற்று காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலை மாற்றம் அடைந்தது. காலையில் சரிந்த தங்கம் மாலையில் விலை உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை , மதுரை நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

Gold Rate: புறப்பட்ட இடத்திற்கே வந்த தங்கம்.. ஏமாற்றம் தரும் வெள்ளி..!!

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் விலை உயர்வு கண்டு, குறைந்து 14,170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Also Read

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள் கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது ஒரு கிராம் 14,130 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பின் செவ்வாய்க்கிழமை விலை உயர்வு புதன் கிழமை விலை சரிவு , வியாழன்று விலை உயர்வு என இருந்த தங்கம் நேற்று காலை, மாலை என இரண்டு முறை மாற்றம் கண்டது. இன்று காலை தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஒப்பிட்டால் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் மட்டுமே விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறுவது, இறங்குவது என மாறி மாறி அதே விலையிலேயே தான் நீடிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தங்கம் விலை சரிந்தது, ஆகஸ்டில் உயர்ந்தது, ஆனால் செப்டம்பரில் தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் இப்போது தங்கம், வாங்கலாமா , முதலீடு செய்யலாமா வேண்டாமா என மக்களும் முதலீட்டாளர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

Recommended For You

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 16 ரூபாய் விலை கூடியுள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,458 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,580 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,940 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கமாகவே இருக்கிறது.ஈரான் போர் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரான் போர் தீவிரமடைந்தால் தங்கம் விலை குறையும், நிலைமை சீரானால் தங்கம் விலை உயரும்.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. கிட்டதட்ட 8 நாட்களாக விலை மாறாமல் இருந்த வெள்ளி நேற்று காலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து மாலை 5 ரூபாய் விலை உயர்ந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+