டிசம்பர் 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 2 தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிசம்பர் மாதத்தில், டிசம்பர் 11-ஆம் தேதி அன்று தங்கம் விலை 7,300-ஐ நெருங்கியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்து டிசம்பர் 20 அன்று 7,040-ஆகக் குறைந்தது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,125-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,773-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய (25/12/24) தங்கம் விலை நிலவரம்: நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,100-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,800-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 71,000-த்திற்க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.61,960-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,450-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,865-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 46,920-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,650-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய (26/12/24) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 25 அதிகரித்து ரூ. 7,125-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ. 57,000-த்திற்க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 250 அதிகரித்து ரூ.71,250-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 28 அதிகரித்து ரூ. 7,773-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 224 அதிகரித்து ரூ. 62,184-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 280 அதிகரித்து ரூ. 77,730-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 20 அதிகரித்து 5,885-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 160 அதிகரித்து ரூ. 47,080-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ. 58,850-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications