பிப்ரவரி 19-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் அதிகரித்திருக்கிறது. 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் கூடி இருக்கிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் மற்றும் 18 கேரட் தங்க விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு புதிதாக நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,035-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,765-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

நேற்றைய (18/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,970-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,760-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,700-க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,695-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,560-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,950-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,555-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,440-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,550-க்கும் விற்பனையானது.
இன்றைய (19/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ. 8,035-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.520 அதிகரித்து ரூ. 64,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 650 அதிகரித்து ரூ.80,350-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ. 8,765-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.560 அதிகரித்து ரூ. 70,120-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.700 அதிகரித்து ரூ. 87,650-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 55 அதிகரித்து ரூ. 6,610-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.440 அதிகரித்து ரூ. 52,880-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.550 அதிகரித்து ரூ. 66,100-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தினம் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கம் ரூ.8000-த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்தாலும் அல்லது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணத்தினாலும் தங்கம் விலை உயரலாம்.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது நுகர்வோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்த பலரும் இந்த விலை உயர்வு காரணமாக தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதுவும் மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கத்திற்கானது மட்டுமே. இதோடு ஜிஎஸ்டி, மேக்கிங் சார்ஜஸ் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் 1 கிராம் தங்கம் தோராயமாக ரூ.9,000-த்தை கடந்து விடும்.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications