பிப்ரவரி 21-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,025-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,775-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை கிட்டத்தட்ட அனைத்து நாட்களிலுமே ஏற்றத்தை கண்டது. இதனால் இன்று விலை குறையுமா? நாளை விலை குறையுமா? என்று புதிதாக நகை வாங்க இருந்தவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஏதுவாக இன்றைய தினம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்றைய (20/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,070-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,700-க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,804-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,432-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 88,040-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,640-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 53,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 66,400-க்கும் விற்பனையானது.
இன்றைய (21/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.45 குறைந்து ரூ. 8,025-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.360 குறைந்து ரூ. 64,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.450 குறைந்து ரூ.80,250-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.49 குறைந்து ரூ. 8,755-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.392 குறைந்து ரூ. 70,040-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.490 குறைந்து ரூ. 87,550-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.35 குறைந்து ரூ. 6,605-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.280 குறைந்து ரூ. 52,840-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.350 குறைந்து ரூ. 66,050-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி 107.9 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,07,900-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications