Gold Rate: ஒரே வாரத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! இந்த வாரம் என்ன ஆகுமோ?

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடர்ச்சியாக விலை குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து இன்று வரையிலான இந்த ஒன்பது நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக உயர்ந்து இருக்கின்றன. கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்குப் பிறகு உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக விலை உயர்ந்திருக்கிறது. ஜனவரி மாதத்திற்கு பின் பெரிய அளவில் உயராமல் ரெஸ்ட் மோடில் இருந்த தங்கம் மீண்டும் பீஸ்ட் மோடுக்கு திரும்பி விட்டதா என மக்கள் கவலைப்பட தொடங்கியுள்ளனர்.

Gold Rate: ஒரே வாரத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! இந்த வாரம் என்ன ஆகுமோ?

சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13220 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று 13,965 ரூபாயாக இருக்கிறது. இதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 745 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரனுக்கு 5960 ரூபாய் விலை கூடியிருக்கிறது. 10 கிராமுக்கு என பார்க்கும்போது 7450 ரூபாய்க்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் 14,422 ரூபாயாக இருந்தது அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம், விலை 15,235 ரூபாய் என விலை கூடி இருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி உடன் ஒப்பிடும் போது 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 813 ரூபாயும் 10 கிராமுக்கு 8,130 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

தங்கத்தின் விலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் சரசரவென விலை உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமே நகை பிரியர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் பேரதிர்ச்சியை தரும் வாரமாக அமைந்துவிட்டது. தங்கம் தான் இப்படி என்றால் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

Also Read

ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு கிராம் 250 ரூபாயாக இருக்கிறது. இந்த ஒரு வார காலத்திலேயே வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 15,000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே வெள்ளியின் விலை பெரிய அளவு உயராத நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவிலான உயர்வை கண்டிருக்கிறது.

வரும் வாரம் தங்கம் வெள்ளியின் விலை குறையுமா அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தை போலவே விலை கூடுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. உலக சந்தையில் நிகழும் தங்க விலை மாற்றங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவிலும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கம் வெள்ளிக்கு மாற்றாக முதலீடு செய்து வட்டி வருமானம் பார்த்தனர். தற்போது ஈரான் போர் முடிவதற்கான சூழல்கள் தென்படுகின்றன அது மட்டுமில்லாமல் அமெரிக்க சந்தையில் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகியுள்ளன. இவற்றின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து இருக்கின்றன.

Recommended For You

எனவே பத்திர முதலீடுகள் பெரிய அளவில் லாபம் தராது , ஈரான் போரும் முடியக்கூடிய சூழல் இருப்பதால் தங்கத்தின் விலை தான் இனி உயர போகிறது என ஏராளமான பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதனால்தான் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வாரத்திலும் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகளே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மீண்டும் ஈரானில் தாக்குதல் நடந்து கச்சா எண்ணெய் விலை கூடினால் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+