உலகளவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கமும் மாற்றமும் உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் வழக்கம் போல் தங்கள் முதலீடுகளை காப்பாற்றும் நோக்கில் பெரும் தொகை தங்கம் மீது முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர துவங்கியது.
இதனால் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் இந்திய சந்தையில் 61000 ரூபாய் அளவீட்டை தாண்டியுள்ளது. சர்வதேச அளவில், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட மாற்றம் டாலர் மதிப்பை சரிவுக்கு பாதைக்கு தள்ளி, இதை ஈடு செய்ய தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து பெரும் உயர்வு பதிவாகியுள்ளது.

இதன் எதிரொலியாக புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 33 பைசா அதிகரித்து ரூபாய் மதிப்பு 82 ஆக முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு உலகில் பெரும்பாலான நாணயங்களுக்கு எதிராக டாலர் சரிவை சந்தித்துள்ளது. டாலர் சரிவு இந்திய சந்தைக்கு பெரும் பலத்தை அளிக்கிறது என்றால் மிகையில்லை.
ஆனால் தங்கம் விலை உயர இதுமட்டும் காரணமில்லை என்பது தான் உண்மை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு மற்றும் அவரின் கைது நடவடிக்கை, மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு காரணமாக பங்குச்சந்தை மீதான முதலீடுகளில் தடுமாற்றம் ஆகிய இரண்டும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2031 டாலர் வரையில் உயர்ந்து பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி காலை வர்த்தகத்தில் 2008 டாலரில் துவங்கியுள்ளது. இதனால் இந்திய சந்தையிலும் இது கட்டாயம் எதிரொலிக்கும், இதோடு வெள்ளிக்கிழமை புனித வெள்ளி காரணமாக உலகில் பல நாடுகளில் வர்த்தக சந்தை மூடப்படும் நிலையில் தங்கம் விலை உயர்வின் வேகம் கணிசமாக குறையும்.
எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ஜூன் மாத ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.38 சதவீதம் சரிந்து 60,622.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.36 சதவீதம் சரிந்து 74,285 ரூபாயாக உள்ளது. இந்த் நிலையில் முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும், அடுத்த 6 முதல் 8 மாதத்திற்கு தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ரீடைல் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 62,800 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது. இது ரீடைல் சந்தையில் இன்று விற்பனை செய்யும் விலை, இதில் ஜிஎஸ்டி வரியும் அடக்கம் என்பதை மறந்துவிட வேண்டாம். அடுத்த சில நாட்களில் தங்கம் விலை 2075 ரூபாய் வரையில் உயர அதிக வாய்ப்புள்ளது எனவும் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications