இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு விதித்த வரி, சீனாவில் நடந்த SCO மாநாடு மற்றும் பிரிக்ஸ் நாடுகள் ஒன்று கூடி எடுக்கும் முக்கியமான முடிவு என பல விஷயங்கள் முதலீட்டு சந்தையை தலைகீழாக மாற்றியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி வருவதற்கு மத்தியிலும் இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் காணப்படுகிறது.
மறுமுனையில் இன்றைய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன. பண்டிகை காலம் என்பதால் உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது, அமெரிக்க டாலரின் பலவீனம், செப்டம்பரில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு மற்றும் அவற்றின் உலக பொருளாதார வளர்ச்சி தடுமாற்றங்கள் காரணங்களால் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது.

தங்கம் விலை வரலாற்று உச்சம்:
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் 3ஆம் தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்திற்கான பியூச்சர் ஒப்பந்தங்கள் 2 சதவீதம் உயர்ந்து ரூ.1,05,937 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. இதேபோல் டிசம்பர் 5ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி பியூச்சர் ஒப்பந்தங்கள் 2 சதவீதம் உயர்ந்து ரூ.1,24,214 என்ற உச்சத்தை தொட்டது.
ரீடைல் சந்தை தங்கம் விலை:
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் உயர்ந்து 97,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 930 ரூபாய் உயர்ந்து 1,05,880 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 744 ரூபாய் உயர்ந்து 84,704 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,36,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் எவ்விதமான விலை மாற்றமுமின்றி 38,690 ரூபாயாக உள்ளது.
இந்த விலை உயர்வு தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு போக்கை காட்டுகிறது, மேலும் இது ஏற்கனவே தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருந்தாலும், புதிதாக வாங்கும் மக்களுக்கு இது பெரிய சுமையாக இருக்கும். குறிப்பாக திருமணத்திற்காகவும், பிற சுப நிகழ்ச்சிக்காகவும் தங்கத்தை வாங்குவோருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும்.
தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்:
தங்க விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பரில் வட்டி விகிதத்தை குறைக்கும் எதிர்பார்ப்பு இதில் முதன்மையானது. ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், ஜாக்சன் ஹோல் உரையில் விகித குறைப்பு இருக்கும் என்பதற்கான சிக்னலை காட்டிய நிலையில், பிற அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் கிறிஸ்டோஃபர் வாலர் செப்டம்பரில் விகித குறைப்பு மற்றும் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் மேலும் குறைப்புகளை ஆதரிப்பதாக கூறினார். சான் ஃபிரான்சிஸ்கோ ஃபெட் வங்கி தலைவர் மேரி டாலி தொழிலாளர் சந்தையை கருத்தில் கொண்டு விகித குறைப்பு இருக்கும் என அறிவித்தார்.
இதன் மூலம் வட்டி குறைப்புக்கான வாய்ப்புகளை கணக்கிடும் சிஎம்இ ஃபெட்வாட்ச் கருவி, அமெரிக்க மத்திய வங்கி 25 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கு 87 சதவீதம் வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது. ஃபெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டம் செப்டம்பர் 16-17இல் நடக்க உள்ளது, இக்கூட்டத்தில் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்.
இது தங்கம் வாங்க சரியான நேரமா?
முதலீட்டு சந்தை நிபுணர்களின் சாரசரி கருத்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கின்றனர், இத்தகைய சூழ்நிலையில் கையில் இருக்கும் தங்கத்தை லாபம் பார்க்க வேண்டும் என்பதை தவிர்த்து, விலை குறையும்போது வாங்க பரிந்துரைக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் பெரும் லாபத்தை தங்கம் மீதான முதலீட்டில் பெற முடியும்.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications