Gold Rate Today: சட்டென சரிந்த தங்கம் விலை! கூடுதல் விலை வைக்கும் தங்க டீலர்கள்!

பார்த்தசாரதி சுவாமி வீற்று இருக்கும் சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,090 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் 220 ரூபாய் விலை சரிவு. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 51,107 ரூபாயிலிருந்து 321 ரூபாய் (0.62 சதவிகிதம்) சரிந்து 50,786 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

சர்வதேச தங்கம் (XAU USD CUR) விலை, நேற்று 1,922 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (13 அக்டோபர் 2020) 8 டாலர் (0.33 %) விலை இறக்கம் கண்டு 1,914 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

ஆபரணத் தங்கம் - கூடுதல் விலைக்கு விற்கும் தங்க டீலர்கள்

ஆபரணத் தங்கம் - கூடுதல் விலைக்கு விற்கும் தங்க டீலர்கள்

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில், கடந்த வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு சுமாராக 6 டாலர் தள்ளுபடி கொடுத்துக் கொண்டு இருந்த தங்க டீலர்கள், தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு சுமாராக 2 டாலர் கூடுதலாக வைத்து விற்கிறார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு பக்கம் தங்க டீலர்கள் விலை ஏற்றிக் கொண்டு இருக்கும் போது, மறு பக்கம், மேலே சொல்லி இருப்பது போல தங்கம் விலை சரிந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் Stimulus Package

அமெரிக்காவின் Stimulus Package

உலக பொருளாதாரமே, அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் வர இருக்கிறது. இந்த குறுகிய கால கட்டத்துக்குள், ஸ்டிமுலஸ் பேக்கேஜ் விவகாரத்தில் இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. எனவே, ஸ்டிமுலஸ் பேக்கேஜ் அதிபர் தேர்தலுக்கு முன் வராமலும் போகலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

ஜனநாயகக் கட்சி வென்றால்

ஜனநாயகக் கட்சி வென்றால்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், தற்போது பேசப்பட்டு வரும் தொகையை விட பெரிய தொகை ஸ்டிமுலஸ் பேக்கேஜாக அறிவிக்கப்படலாம் என லைவ் மிண்ட் சொல்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் கொண்டு வருவது எளிதாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Gold Rate 12 அக்டோபர் 2020

Gold Rate 12 அக்டோபர் 2020

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, 12.10.2020 அன்று 53,310 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

MCX Gold 12 அக்டோபர் 2020

MCX Gold 12 அக்டோபர் 2020

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான (எம் சி எக்ஸ்) 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 12.10.2020 அன்று 236 ரூபாய் (0.5 சதவிகிதம்) விலை ஏற்றம் கண்டு 51,107 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

தாமஸ் கப்லன் கணிப்பு தங்கம் $3,000 முதல் $5,000 தொடலாம்

தாமஸ் கப்லன் கணிப்பு தங்கம் $3,000 முதல் $5,000 தொடலாம்

தாமஸ் கப்லன் (Thomas Kaplan) என்கிற ஃபண்ட் மேனேஜர், கடந்த மே 2019-ல், ப்ளூம்பெர்க் நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில், தங்கம் விலை அடுத்த தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) 3,000 - 5,000 டாலர் வரைத் தொடலாம் எனச் சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை 10 அக்டோபர் 2020

தங்கம் விலை 10 அக்டோபர் 2020

சென்னையில், இன்று (10 அக்டோபர் 2020, சனிக்கிழமை) 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு பவுன் (24 கேரட் 8 கிராம்) தங்கம் விலை 42,592 ரூபாய்.
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,810 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு பவுன் (22 கேரட் 8 கிராம்) தங்கம் விலை 39,048 ரூபாய்.
10 அக்டோபர் 2020 சனிக்கிழமை விடுமுறை என்பதால் MCX & சர்வதேச சந்தையில் வர்த்தகம் நடைபெறவில்லை.

Gold Rate சர்வதேசம் 12 அக்டோபர் 2020

Gold Rate சர்வதேசம் 12 அக்டோபர் 2020

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த அக்டோபர் 09, 2020 அன்று 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. சனி & ஞாயிறு விடுமுறை போக, 12 அக்டோபர் 2020 அன்று 8 டாலர் இறக்கம் கண்டு, 1,922 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

ஆபரணத் தங்கம் விலை 09.10.2020

ஆபரணத் தங்கம் விலை 09.10.2020

2021-ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் தமிழகத்தின் தலை நகரான சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 52,820 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

MCX Gold 09.10.2020

MCX Gold 09.10.2020

இந்தியாவின் MCX (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்) சந்தையில், டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை நேற்று (9 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை) 642 ரூபாய் (1.28 %) விலை அதிகரித்து 50,817 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

International Gold price 09.10.2020

International Gold price 09.10.2020

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை (XAU USD CUR), நேற்று (9 அக்டோபர் 2020) 36 டாலர் (1.93 %) விலை அதிகரித்து 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது போல சர்வதேச தங்கம் விலை 1,920 டாலரைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை ரேஞ்ச்

தங்கம் விலை ரேஞ்ச்

செப்டம்பர் 1-ம் தேதி முதல் இன்று வரை, சென்னை ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 10 கிராம்) 51,870 முதல் 54,200 ரூபாய்க்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அதே போல எம் சி எக்ஸ் டிசம்பர் காண்டிராக்ட் தங்கம் விலை 49,252 முதல் 52,390 ரூபாய்க்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலையும் 1,861 - 1,970 டாலருக்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தங்கத்தில் மத்திய வங்கிகளின் முதலீடு குறைகிறது

தங்கத்தில் மத்திய வங்கிகளின் முதலீடு குறைகிறது

இந்தியாவுக்கு எப்படி ஆர்பிஐ மத்திய வங்கியாக இருந்து செயல்படுகிறாதோ, அதே போல, மற்ற நாடுகளுக்கு ஒரு மத்திய வங்கி என ஒன்று இருக்கிறது. முன்பைப் போல உலக நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து இருக்கிறது. கடந்த ஆகஸ்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள், வாங்கிய தங்கத்தை விட, விற்ற தங்கம் அதிகம் என்கிறது உலக தங்க கவுன்சில்.

இறக்கம் கண்ட SPDR Gold Trust கையிருப்பு

இறக்கம் கண்ட SPDR Gold Trust கையிருப்பு

உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க கை இருப்பு, கடந்த சில நாட்களாக இறக்கம் கண்டு வருகிறது. கடந்த 1 அக்டோபர் 2020 அன்று, இந்த ட்ரஸ்டின் தங்க கையிருப்பு 1,276.19 டன்னாக இருந்தது, 07 அக்டோபர் 2020 அன்று 1,271.52 டன்னாக குறைந்து இருக்கிறது. ஆக தங்கத்தில் முதலீடு குறைந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

$3,000 வரை தொடலாம்

$3,000 வரை தொடலாம்

கோல்ட் மேன் சாக்ஸ் (Goldman Sachs), க்ரெடிட் சூசி (Credit Suisse), போன்ற கம்பெனிகள், தங்கத்தின் விலை 2,300 டாலர் வரை அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது.

ஜிம் ராஜர்ஸ் கமாடிட்டி பிதாமகனின் கணிப்பு

ஜிம் ராஜர்ஸ் கமாடிட்டி பிதாமகனின் கணிப்பு

ஜிம் ராஜர்ஸ். தங்கம் விலை ஏற்றம் போலவே, சமீபமாகத்தான் இவரின் பெயர், இந்திய பத்திரிகைகளில் அதிகம் வரத் தொடங்கி இருக்கிறது. உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் (ஜிம் ராஜர்ஸ்) தங்கம் விலை எதிர்காலத்தில் புதிய உச்சத்தைத் தொடும் என மொட்டையாகச் சொல்லி இருக்கிறார்.

தங்கத்தில் முதலீடு செய்து வரும் ஜிம் ராஜர்ஸ்

தங்கத்தில் முதலீடு செய்து வரும் ஜிம் ராஜர்ஸ்

அதோடு கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தன் சொந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து கொண்டே வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள், நல்ல தருணத்தில் விலை குறையும் போது எல்லாம் வாங்குங்கள். நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+