2024ஆம் ஆண்டு விடைபெற இன்னும் 2 நாட்களே இருக்கிறது. இதற்கிடையில், டிசம்பர் 30 ஆம் தேதியான இன்று தங்கம் ஆனது வாங்குவோரை சோகம் அடைய செய்துள்ளது. ஆம், இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 தினங்களாக சரிவில் இருந்து வந்த தங்கம் ஆனது புத்தாண்டுக்கு 2 தினங்கள் உள்ள நிலையில், நகை வாங்குவோர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,150-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,799-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் 1 சவரன் இன்று 120 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, டிசம்பர் 29 ஆன நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை மாறாமல் இருந்த நிலையில், இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் அதிகரித்திருக்கிறது. அதன்படி நேற்று 1 கிராம் ரூ.7,135-க்கு விற்கப்பட்ட 22 கேரட் இன்று ரூ.7150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,784-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.7799-க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் மற்றும் 24கேரட் தங்கம் ரூ.120 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை: 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,799-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,392-க்கும் விற்பனையாகின்றன. அதேபோல்,10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,999-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 5,890-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,920-க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் விலையை பொறுத்தவரை முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,150-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,500-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,799-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,392-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,999-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5,895-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,160-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,950-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: தமிழ்நாட்டில் வெள்ளி விலையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 26 முதல் இன்று டிசம்பர் 30 வரை முக்கிய நகரங்களில் வெள்ளி விலை ஆனது கிராம் 100.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 1,00,000-த்திற்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!



Click it and Unblock the Notifications