சட்டென உயர்ந்த தங்கம் விலை.. அடுத்தது என்ன நடக்கும்? தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும், அளவும் குறைந்தபாடு இல்லை. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் விலை 2025ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே உயர்வுடன் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று காலை (வியாழக்கிழமை) வர்த்தகத்தில் இந்திய ரீடைல் சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. பொதுவாக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது தங்கத்தில் முதலீடு செய்வதை காத்திருந்து முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இன்று இந்த போக்கை மீறி முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சட்டென உயர்ந்த தங்கம் விலை.. அடுத்தது என்ன நடக்கும்? தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?


பிப்ரவரி 2025 உடன் முடிவடையும் பியூச்சர் ஆர்டருக்கான MCX தங்க விலை 10 கிராமுக்கு ரூ.77,000 என திறந்தது, வர்த்தக நாள் தொடங்கி சில நிமிடங்களில் ரூ.77,074 என்ற உள்நாள் உயர்வை எட்டியது. இதற்கிடையில், சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்க விலை ஒரு அவுன்ஸ்-க்கு சுமார் 2,632 டாலர் அளவில் இருக்கிறது.

இதன் வாயிலாக இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 71,800 ரூபாயாக உள்ளது. இதேவேளையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 330 ரூபாய் உயர்ந்து 78,330 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 98000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 300 ரூபாய் அதிகரித்து 25,210 ரூபாயாக உள்ளது.


1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57440 ரூபாய், மும்பை - 57440 ரூபாய், டெல்லி - 57560 ரூபாய், கொல்கத்தா - 57440 ரூபாய், பெங்களூர் - 57440 ரூபாய், ஹைதராபாத் - 57440 ரூபாய், கேரளா - 57440 ரூபாய், புனே - 57440 ரூபாய், பரோடா - 57480 ரூபாய், அகமதாபாத் - 57480 ரூபாய், ஜெய்ப்பூர் - 57560 ரூபாய், லக்னோ - 57560 ரூபாய், கோயம்புத்தூர் - 57440 ரூபாய், மதுரை - 57440 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,180 ரூபாய், மும்பை - 7,180 ரூபாய், டெல்லி - 7,195 ரூபாய், கொல்கத்தா - 7,180 ரூபாய், பெங்களூர் - 7,180 ரூபாய், ஹைதராபாத் - 7,180 ரூபாய், கேரளா - 7,180 ரூபாய், புனே - 7,180 ரூபாய், பரோடா - 7,185 ரூபாய், அகமதாபாத் - 7,185 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,195 ரூபாய், லக்னோ - 7,195 ரூபாய், கோயம்புத்தூர் - 7,180 ரூபாய், மதுரை - 7,180 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,833 ரூபாய், மும்பை - 7,833 ரூபாய், டெல்லி - 7,848 ரூபாய், கொல்கத்தா - 7,833 ரூபாய், பெங்களூர் - 7,833 ரூபாய், ஹைதராபாத் - 7,833 ரூபாய், கேரளா - 7,833 ரூபாய், புனே - 7,833 ரூபாய், பரோடா - 7,838 ரூபாய், அகமதாபாத் - 7,838 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,848 ரூபாய், லக்னோ - 7,848 ரூபாய், கோயம்புத்தூர் - 7,833 ரூபாய், மதுரை - 7,833 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,925 ரூபாய், மும்பை - 5,875 ரூபாய், டெல்லி - 5,887 ரூபாய், கொல்கத்தா - 5,875 ரூபாய், பெங்களூர் - 5,875 ரூபாய், ஹைதராபாத் - 5,875 ரூபாய், கேரளா - 5,875 ரூபாய், புனே - 5,875 ரூபாய், பரோடா - 5,879 ரூபாய், அகமதாபாத் - 5,879 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,887 ரூபாய், லக்னோ - 5,887 ரூபாய், கோயம்புத்தூர் - 5,925 ரூபாய், மதுரை - 5,925 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,210 ரூபாய், மும்பை - 25,210 ரூபாய், டெல்லி - 25,210 ரூபாய், கொல்கத்தா - 25,210 ரூபாய், பெங்களூர் - 25,210 ரூபாய், ஹைதராபாத் - 25,210 ரூபாய், கேரளா - 25,210 ரூபாய், புனே - 25,210 ரூபாய், வதோதரா - 25,210 ரூபாய், அகமதாபாத் - 25,210 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 98,000 ரூபாய், மும்பை - 90,500 ரூபாய், டெல்லி - 90,500 ரூபாய், கொல்கத்தா - 90,500 ரூபாய், பெங்களூர் - 90,500 ரூபாய், ஹைதராபாத் - 98,000 ரூபாய், கேரளா - 98,000 ரூபாய், புனே - 90,500 ரூபாய், பரோடா - 90,500 ரூபாய், அகமதாபாத் - 90,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 90,500 ரூபாய், லக்னோ - 90,500 ரூபாய், கோயம்புத்தூர் - 98,000 ரூபாய், மதுரை - 98,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,821 ரூபாய்
குவைத் - KWD 24.10 - 6,706 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,951 ரூபாய்
ஓமன் - OMR 31.40 - 6,995 ரூபாய்
கத்தார் - QAR 298 - 7,012 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 300 - 6,849 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,845 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 295.25 - 6,894 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,690 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
துபாய் (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
புஜைரா (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 295.25 - 6,894 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 298 - 7,012 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.40 - 6,995 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 300 - 6,849 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.03 - 6,668 ரூபாய்
கனடா - CAD 117.50 - 7,009 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,654 ரூபாய்
நேபாளம் - NPR 11,910.35 - 7,409 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,254 ரூபாய்
குவைத் - KWD 26.28 - 7,313 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,238 ரூபாய்
ஓமன் - OMR 33.45 - 7,452 ரூபாய்
கத்தார் - QAR 318.50 - 7,494 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 324 - 7,397 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,595 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 319 - 7,449 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,119 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
துபாய் (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
புஜைரா (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 319 - 7,449 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318.50 - 7,494 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.45 - 7,452 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 324 - 7,397 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.67 - 7,274 ரூபாய்
கனடா - CAD 124 - 7,397 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,257 ரூபாய்
நேபாளம் - NPR 12,946.04 - 8,053 ரூபாய்

இன்று தங்கம் வர்த்தகத்தின் துவக்கம் முதலே கொள்முதல் அதிகமாக முக்கிய காரணமாக இருப்பது வெளிநாட்டு நாணயச் சந்தையில் லாபம் எடுக்கும் போக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள காரணமாக இந்த பணம் தங்கம் மீது முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க டாலர் ஆதிக்கம் குறைந்து வருவது மூலம் தங்கத்தை சர்வதேச சந்தையில் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேப்பிடல்.காம் நிறுவனத்தின் நிதிச் சந்தை ஆய்வாளரான கைல் ரோடா கூறுகையில், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பில் வேகம் குறைந்துள்ளது, அமெரிக்க டாலரின் சமீபத்திய தடுமாற்றம் ஆகியவற்றின் மூலம் தங்கம் விலையில் தடுமாற்றம் ஏற்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் தொடர்ந்து உயரும் நிலையை (bullish outlook) இருக்கும் என்று கைல் ரோடா நம்புகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+