தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாக விலை குறைந்துள்ளன. வீட்டு விசேஷங்களுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் விலை சரிந்து 13,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 21ஆம் தேதி முதலே இறங்குமுகமாத தான் இருக்கிறது. அந்த வகையில் 21ஆம் தேதி முதல் இன்று வரை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 645 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதாவது ஒரு சவரனுக்கு 5,160 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது. 2 வாரங்களில் ஒரு சவரனுக்கு 5,160 ரூபாய் சரிவு என்பது மிகப்பெரிய விலை குறைவாகும்.
நேற்று இன்று என இந்த 2 வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,880 ரூபாயும் விலை குறைந்துள்ளது. வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள், நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த விலை குறைவு வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது தான் புத்திசாலித்தனம்.
24 கேரட் தங்கம் விலையை ஒரு கிராம் 14,880 ரூபாய்க்கும் 10 கிராம் 1,48,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று மாற்றமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை சரிந்து 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை சரிந்து 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து வெள்ளி விலை சரிவில் தான் இருக்கிறது. இந்த 2 வாரங்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாயும் கிலோவுக்கு 20000 ரூபாயும் விலை சரிந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை கைவிட்டு பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். மேலும் ஈரான் அமெரிக்கா போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுவும் தங்கம்,, வெள்ளி விலைகள் சரிய காரணமாக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,128 டாலர்களாக சரிந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


