அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்கள் முடிய போகிறது. இந்த 10 நாட்களில் தங்கம் விலை குறைந்தது போல தான் இருந்தது ஆனால் உண்மையான கணக்கு செய்து பார்த்தால் தங்கம் விலை சத்தமே இல்லாமல் உயர்ந்திருக்கிறது. முதலில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் விலை உயர்ந்து 13,880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாதத்திலேயே இது தான் அதிகபட்ச விலை. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 520 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,11,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இந்த 10 நாட்களில் தங்கம் விலை 3 நாட்கள் விலை குறைந்துள்ளது, 4 நாட்கள் விலை உயர்ந்துள்ளது,3 நாட்கள் விலை மாறவில்லை. கடந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1760 ரூபாயும் 10 கிராமுக்கு 2200 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 15,142 ரூபாய்க்கும் 10 கிராம் 1,51,420 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 240 ரூபாயும் 10 கிராமுக்கு 2,400 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும் ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 8 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
செப்டம்பரில் தங்கம் விலை குறைந்ததால் அக்டோபரிலும் அதுவே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபரில் முதலில் இறக்கத்துடன் இருந்த தங்கம் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக காணப்படுகிறது. அந்த வகையில் தங்கம் விலை இன்னும் குறையும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வேறு வர இருப்பதால் தங்கம் விலை இன்னும் உயருமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் போக்கை பொறுத்து தான் தீர்வு கிடைக்கும். விலை ஏறுமா, இறங்குமா என காத்திருக்காமல் தங்கத்தை வாங்கி வைப்பதும் முதலீடு செய்வதும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

