தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக விலை உயர்வு கண்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்வது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 25 ரூபாய் உயர்ந்து 12,825 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை கூடி 1,02,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் கடந்த வாரம் வரலாற்றில் இல்லாத சரிவை கண்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் படிப்படியாக விலை ஏறி வருகிறது.

தமிழ்நாட்டில் திங்கள் தொடங்கி இன்று வரையிலான இந்த மூன்று நாட்களில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 95 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 760 ரூபாய் விலை கூடியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன இந்த மூன்று நாட்களும் தங்கம் விலை இப்படி லேசாக உயர்ந்தாலும் சவரனுக்கு இன்னமும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. இருந்தாலும் உலக சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம் விலை ஏறவும் செய்யலாம் இறங்கவும் செய்யலாம் , ஆனால் தற்போதைக்கு பெரிய ஏற்றம் இருக்காது என்பதே நிபுணர்களின் கணிப்பு.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,991 ரூபாய்க்கும் 10 கிராம் 1,39,910 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,495 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையை விட கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் விலை சரிவில் தான் இருக்கிறது. எனவே வெள்ளி பொருட்கள் வாங்கவும் இது சிறந்த தருணமாக உள்ளது.
அமெரிக்காவில் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை பெறுகிறதா அல்லது ஜனநாயக கட்சி வெற்றி பெறுகிறதா என்பதை பொறுத்து உலக தங்க சந்தையில் இனி வரும் நாட்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,947 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளதே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

