கடந்த 2 வாரங்களாகவே தங்கம் விலை தாறுமாறாக சரிந்து சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்க வேண்டியவர்களூக்கு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 235 ரூபாய் குறைந்து 11,980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1880 ரூபாய் விலை சரிந்து 95,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 8ஆவது வர்த்தக நாளாக விலை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 8 வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1,230 ரூபாயும் ஒரு சவரனுக்கு 9,840 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 12,300 ரூபாய் விலை குறைந்துள்ளது. 8 நாட்களில் தங்கம் விலை இவ்வளவு குறைந்திருப்பது மிகப்பெரிய சரிவாகும்.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,069 ரூபாய்க்கும் 10 கிராம் 1,30,690 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,805 ரூபாய்க்கும் ஒரு சவரன் 78,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 180 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 1.80 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 245 ரூபாயும் கிலோவுக்கு 2.45 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவதே தமிழ்நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை சரிய காரணம். அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் தங்கம் 3,726 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 45 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.29 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. தங்கம் விலை இன்னமும் விலை குறையவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர், குறிப்பாக அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கி வெளியிடும் அறிவிப்பு தங்கத்தின் விலை போக்கை தீர்மானிக்கும் என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

