தங்கம் தந்த சர்ப்பிரைஸ் : அக்டோபர் மாதத்தில் இது இரண்டாவது முறை..!! நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!!

பொதுவாக அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஏறுமுகமாக தான் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக தங்கம் விலை ஏறாமல் இருக்கிறது. முதலில் இன்று சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை மாறவில்லை. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் தந்த சர்ப்பிரைஸ் : அக்டோபர் மாதத்தில் இது இரண்டாவது முறை..!! நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இந்த 8 நாட்களில் தங்கம் விலை 3 நாட்கள் விலை குறைந்துள்ளது, 2 நாட்கள் விலை உயர்ந்துள்ளது,3 நாட்கள் விலை மாறவில்லை. ஞாயிற்றுக்கிழமை நாளில் தங்கம் விலை மாறாது. ஆனால் இந்த வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையான இன்று தங்கம் விலை மாறவில்லை. வீட்டில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்று கடைக்கு சென்றால் குறைந்த விலைக்கே தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,957 ரூபாய்க்கும் 10 கிராம் 1,49,570 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,265 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 6 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

Also Read

அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பரில் வட்டியை உயர்த்தியது, இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. மேற்கொண்டு மேலும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை கைவிட்டு பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

Recommended For You

ஈரான் போரும் பெரியதாக தீவிரமடையாமலும் , சமாதானமாகமலும் இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள குழப்பமே தங்கம், வெள்ளி விலைகள் மாறாமல் இருக்க முக்கிய காரணமாக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு 4,135 டாலர்களாக உள்ளது, எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 1,49,682 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+