ஜூன் 4-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்துள்ளது. மக்கள் தங்கத்தின் விலை அதிகரிப்பிலும் இதை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால் தான் ரூ 6,000-த்தில் 1 கிராம் விற்பனை செய்யப்பட்டபோது நகைக்கடைகளில் பெருகிய அதே கூட்டம், இன்று ரூ.16,000-த்தை நெருங்கும் போதும் அப்படியே இருக்கிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதை கணிக்கவே முடியாது. ஒரு சில நேரம் தேவை அதிகமாக இருந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதேபோல பங்குச் சந்தை சரிவு, போர் பதற்றம், அரசியல் பதற்றங்கள் போன்ற காரணத்தினாலும் தங்கத்தை மக்கள் அதிகம் வாங்குவார்கள். அப்போதும் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இன்றைய தங்கம் விலை: இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.21 குறைந்து ரூ.15,797-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.12,160-க்கும் விற்பனையாகிறது. 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ.168 குறைந்து ரூ.1,26,376-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.97,280-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மாதம் மே 31 தொடங்கி ஜூன் 4-ஆம் தேதியான இன்று வரையில் தங்க விலையில் பெரிதாக அதிகரிப்பு ஒன்றும் இல்லை. 3 நாட்கள் நிலையாக இருந்தது. மீதி 2 நாட்கள் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் 5.10% வரை தங்கம் விலை அதிகரித்திருக்கிறது.

வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.285-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து 2,85,000 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை 1 கிராம் 100 ரூபாய்க்கு விற்பனையான போது அதிலிருந்து இந்த அளவு விலை உயர்வு இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் தங்கத்தை போலவே வெள்ளியும் சமீப காலமாக முதலீட்டாளர்களுக்கு நல்ல ரிட்டன்ஸை வழங்கி வருகிறது.
இந்தப் பதிவில் நீங்கள் பார்த்த விலை அனைத்தும் வெறும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலை மட்டுமே. நகைக்கடைகளில் சென்று ஆபரணமாகவோ அல்லது வெள்ளி அணிகலன்களாகவோ வாங்கினால் அதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் விதிக்கப்படும். குறிப்பாக ஜிஎஸ்டி, மேக்கிங் சார்ஜஸ் போன்றவற்றை செலுத்தி தான் நகைகளாகப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications