தங்கம் விலை தடாலடியாக உயரப்போகுது.. இனி ஒவ்வொரு நொடியும் முக்கியம்..! தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் வாங்காமல் இருக்கப்போவது இல்லை என்ற நிலை தான் தற்போது இந்தியாவில் உள்ளது. பவுன் கணக்கில் வாங்கியவர்கள் கிராம் கணக்கில் வாங்குகிறார்கள், கிராம் கணக்கில் வாங்கியவர்கள் கோல்டு ஈடிஎப், டிஜிட்டல் கோல்டு போன்றவற்றின் மூலம் சிறு சிறு தொகையை முதலீடு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் டாலர் மதிப்புக்கு வேட்டு வைக்கவும், அமெரிக்காவின் அரசு பத்திர முதலீட்டை குறைக்கவும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். 30 வருடங்களுக்கு பின்பு அமெரிக்க தங்க இருப்பை காட்டிலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அதிகமாக உள்ளது.

தங்கம் விலை தடாலடியாக உயரப்போகுது.. இனி ஒவ்வொரு நொடியும் முக்கியம்..! தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

இத்தகைய முக்கியமான காலக்கட்டத்தில் தான் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தை செப்டம்பர் 16-17 ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் தங்கத்தின் விலையை தலைகீழாக மாற்றப்போகிறது. இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் என்ன..?

எம்சிஎக்ஸ் (MCX) சந்தையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாபம் எடுக்கும் நோக்கத்தில் ஏற்கனவே செய்த முதலீட்டை விற்ற காரணத்தால் சற்று சரிந்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உயர்வுக்கு வந்தது, ஆயினும் தடுமாற்றம் குறையாமல் உள்ளது முக்கிய கேள்வியாக உள்ளது.

ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் உயர்ந்து 1,02,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 770 ரூபாய் உயர்ந்து 1,12,150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 616 ரூபாய் உயர்ந்து 89,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,44,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் குறைந்து 39,600 ரூபாயாக உள்ளது.

வியாழன்கிழமை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (Fed) அமைப்பின் நாணய கொள்கை முடிவுக்கு முன் முதலீட்டு சந்தை மொத்தமும் தங்கம், வெள்ளி மீது கவனம் செலுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடந்த வாரம் வரையில் தடுமாறிய தங்கம் மற்றும் வெள்ளி பெடரல் ரிசர்வ் வட்டி குறைக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை உணர்ந்த நிலையில் முதலீட்டு சந்தை தனது திசையை திருப்பியுள்ளது.

இதேவேளையில் அமெரிக்க டாலர் மற்ற நாணயங்களுக்கு எதிராக சரிய துவங்கியுள்ளது, இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவில் அதிகரித்திருக்கும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக பெடரல் ரிசர்வ் 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்தால் தங்கம் முக்கியமான முதலீடாக மாறும் என்பதே சந்தையின் நம்பிக்கை.

எம்சிஎக்ஸ் சந்தை
எம்சிஎக்ஸ் தங்கம் அக்டோபர் விகிதங்கள், காலை 9:15 மணிக்கு 0.04 சதவீதம் சரிந்து 10 கிராமுக்கு ரூ.1,10,130-ஆக வர்த்தகமானது. அதே நேரத்தில், வெள்ளி டிசம்பர் விகிதங்கள் 0.06 சதவீதம் குறைந்து கிலோவுக்கு ரூ.1,29,345-ஆக இருந்தன.

ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, தங்கம் 0.06 சதவீதம் உயர்ந்து 1,10,244 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.17 சதவீதம் உயர்ந்து 1,29,653 ரூபாயாக உயர்ந்துள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம்.

அமெரிக்க பொருளாதார சூழல்
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை தற்போது பலவீனமடைந்து வருவதால், பெடரல் ரிசர்வ் 25 அடிப்படை புள்ளிகள பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கும். ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 22,000-ஆக குறைந்தது, ஜூலை மாதத்தின் 79,000-இலிருந்து பெரும் சரிவாகும். இதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக உயர்ந்தது.

இதோடு அமெரிக்க நுகர்வோர் விலை இன்டெக்ஸ் (CPI) பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்ந்து, ஜூலையின் 2.7 சதவீதத்தை விட அதிகமாகியுள்ளது. அமெரிக்க பணவீக்கம் பெடரல் ரிசர்வ் இலக்கான 2 சதவீதத்தை விட அதிகமாக இருப்பதால், 50 bps பெரிய அளவில் வரிகள் குறைக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

சிஎம்இ பெடரல் ரிசர்வ்வாட்ச் டூல் தரவுகள் படி, பெடரல் ரிசர்வ் செப்டம்பர் 17 அன்று 0.25 சதவீதம் வரையிலான வர்த்தகத்தை குறைக்க 96 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், 0.50 சதவீதம் குறைப்பிற்கு வெறும் 4 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளது.

நிபுணர்களின் அறிவுரை:
இந்த சூழ்நிலையில் வட்டி விகித குறைப்பால் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் பெரிய அளவில் தங்கம் மீது திரும்ப வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை உயர வய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் சந்தை நிபுணர்கள், பெடரல் ரிசர்வின் முடிவுகளை கருத்தில் கொண்டு தங்கம் புதிய உச்சங்களை எட்டும் என்பதால், சரிவில் வாங்க பரிந்துரைக்கின்றனர்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள்
தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதில் காலம் காலமாக ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் இந்த தடுமாற்றத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவது என்பது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆனால் அதேபோல் தங்கத்தை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே இதில் நிச்சய லாபம் கிடைக்கும். குறுகிய கால முதலீட்டில் தங்கம் மீதான முதலீட்டில் லாபம் கிடைக்காமல் போகலாம்.

தங்கம் விலையில் இன்று காலை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் என்பது பெடரல் ரிசர்வ் முடிவுகள் மற்றும் மற்றும் அமெரிக்க பொருளாதார நிச்சயமின்மைகள் காரணமாக ஏற்பட்டது என்றாலும், நிபுணர்கள் சரிவில் வாங்க பரிந்துரைக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+