தங்கம் என்பது அனைவருக்கும் ஆசையை கொடுக்கும் ஒன்று. தங்கத்தை தினசரி கடைகளில் வாங்குவோர்களும் அதிகம். தினமும் விலை எந்த அளவில் ஏறுகிறது, இறங்குகிறது என்றெல்லாம் பார்த்து அதற்குதங்குந்தார்போல் தங்கம் வாங்குபவர்களும் உண்டு. சிலர் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வாங்குகின்றனர். அந்த வகையில், இன்று தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கத்தின் விலை ஆனது இன்று ஏற்றம் கண்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் தேதியான நிலவரப்படி தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் விலை ஆனது ரூ.15 அதிகரித்து ரூ. 7450-க்கும் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 அதிகரித்து ரூ. 8127-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600 ஆகவும், 24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.65,016 ஆகவும் உள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: தங்கத்தின் விலையை பொறுத்தவரை மாவட்டங்கள் வாரியாக கோயம்புத்தூர், சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,435-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று ரூ.7,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.59,480 ஆக விற்பனையான நிலையில் இன்று, ரூ.59,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.74,350 விற்பனையான நிலையில் ரூ.150 அதிகரித்து ரூ.74,500 விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8117 விற்பனையான நிலையில், இன்று ரூ.8127-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 64,888 விற்பனையாக நிலையில் இன்று ரூ.65,016 க்கும் விற்கப்படுகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 81,127-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,129-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 49,032-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 61,290-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை அதிகம் விரும்புவோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக வெள்ளி விலை மாறாமல் உள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.104 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,04,000 ஆகவும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications