தங்கம் வாங்குவோருக்கு இன்று ஜாக்பாட் அளிக்கும் விதமாக அதிரடியாக விலை குறைந்துள்ளது. நேற்றும் விலை குறைந்தது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு இன்று இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்குவோருக்கும், முதலீடுகளுக்காக தங்கம் வாங்கும் மக்களுக்கும் இன்று அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்திருக்கிறது. சவரன் ரூ.240 குறைந்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7540 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 30 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,510-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,192-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (28/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,540-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,320-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,400-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,225-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,800-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 82,250-க்கும் விற்பனையானது.
இன்றைய 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 30 குறைந்து ரூ. 7,510-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 240 குறைந்து ரூ. 60,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,100-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.33 குறைந்து ரூ. 8,192-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 264 குறைந்து ரூ. 65,536-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 81,920-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,219-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 49,752-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,082-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி நேற்றைய விலையான அதே ரூ.104 ரூபாயில் விற்பனை ஆகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications