ஜனவரி 7-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை மாறாமல் நிலையாக இருந்து வருகிறது. ஜனவரி 4ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,871-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றுடன் சேர்த்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. புத்தாண்டு தினத்தன்று தங்கம் விலை ஏறத் தொடங்கியது. அதற்கு முந்தைய தினமான டிசம்பர் 31-ஆம் தேதி அன்று தங்கம் விலை சரிவைக் கண்டது.

ஆனால் ஜனவரி 1-ஆம் தேதி, ஜனவரி 2-ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலை தொடர் அதிகரிப்பை கண்டது. ஜனவரி 3-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,260-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,920-க்கும் விற்பனையானது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி அன்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதிலிருந்து இன்று வரையில் ஒரே விலையில் தான் விற்பனையாகிறது.
,
இன்றைய (07/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,150-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,871-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,710-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,960-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 100 ரூபாயை எட்டி இருக்கிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications