தொடர்ந்து 4-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கம் விலை.. 1 சவரன் ரூ. 58,000-த்தை கடந்தது!

ஜனவரி 11-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,300-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,964-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

கடந்த நான்கு தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பை கண்டுள்ளது. கடந்த 4 தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பை கண்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரையில் நிலையாக இருந்த தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக ஏறத் தொடங்கி இன்றுவரையில் சுமார் 100 ரூபாய் அதிகரித்திருக்கிறது

 தொடர்ந்து 4-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கம் விலை.. 1 சவரன் ரூ. 58,000-த்தை கடந்தது!

நேற்றைய (10/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,285-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 58,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,850-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,947-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,576-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 79,470-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.6,010-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,080-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,100-க்கும் விற்பனையானது.

இன்றைய (11/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 15 அதிகரித்து ரூ. 7,300-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 120 அதிகரித்து ரூ. 58,400-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 150 அதிகரித்து ரூ.73,000-திற்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 17 அதிகரித்து ரூ. 7,964-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 136 அதிகரித்து ரூ. 63,712-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 170 அதிகரித்து ரூ. 79,640-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 20 அதிகரித்து 6,030-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 160 அதிகரித்து ரூ. 48,240-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ. 60,300-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,01,000-த்திற்கு விற்பனையாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+