ஜனவரி 17-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,450-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,217-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு 50 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில்.. இன்று மீண்டும் அதிகரித்து கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக ஏற்பட்டுள்ள தொடர் அதிகரிப்பின் காரணமாக தங்கம் விலை ரூ. 8000-த்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

நேற்றைய (16/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,390-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 59,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.73,900-த்ற்க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,062-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 64,496-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 80,620-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,090-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,720-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,900-க்கும் விற்பனையானது.
இன்றைய (17/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 60 அதிகரித்து ரூ. 7,450-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 480 அதிகரித்து ரூ. 59,600-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 600 அதிகரித்து ரூ.74,500-த்ற்க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 65 அதிகரித்து ரூ. 8,127-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 520 அதிகரித்து ரூ. 65,016-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 650 அதிகரித்து ரூ. 81,270-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 50 அதிகரித்து 6,140-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 400 அதிகரித்து ரூ. 49,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 500 அதிகரித்து ரூ. 61,400-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications