இந்திய மக்களின் முக்கிய முதலீட்டு பிரிவாக இருக்கும் தங்கத்தின் விலை இன்று உள்நாட்டு சந்தையிலும் சரி, வெளிநாட்டு சந்தையிலும் சரி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இதற்கு முக்கிய காரணம், உலகளவில் நிலவி வரும் தொடர்ச்சியான வர்த்தகப் போர் குறித்த கவலைகளும், உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த அச்சமும் தான். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், தங்கத்திற்கான தேவை அதிகரித்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, MCX-ல் ஜூன் 5 ஆம் தேதிக்கான தங்கத்தின் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் விலை புதிய வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 9,589.40 ரூபாயை எட்டியது. இதன் பின்னர், காலை 10.15 மணியளவில் 9,586.90 ஆக இருந்தது. இந்த திடீர் விலை உயர்வு தங்கத்தின் டிமாண்ட் முதலீட்டு சந்தையில் அதிகரித்துள்ளதை தெளிவுப்படுத்துகிறது.

உள்நாட்டு சந்தையை போலவே, சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் தங்கத்தின் மீது அனைத்து பிரிவுகளிலும் இருந்து முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, தங்கத்தின் தேவை சர்வதேச சந்தையிலும் அதிகரித்து இதன் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 3354 டாலராக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் குறைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. டாலரின் மதிப்பு குறைவதால், மற்ற நாடுகளின் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் வாங்குவது மலிவாகிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை தடாலடியாக 1050 ரூபாய் உயர்ந்து 89,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1140 ரூபாய் உயர்ந்து 97,310 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்து 71,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1,10,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 230 ரூபாய் உயர்ந்து 26,470 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71360 ரூபாய், மும்பை - 71360 ரூபாய், டெல்லி - 71480 ரூபாய், கொல்கத்தா - 71360 ரூபாய், பெங்களூர் - 71360 ரூபாய், ஹைதராபாத் - 71360 ரூபாய், கேரளா - 71360 ரூபாய், புனே - 71360 ரூபாய், பரோடா - 71400 ரூபாய், அகமதாபாத் - 70560 ரூபாய், ஜெய்ப்பூர் - 71480 ரூபாய், லக்னோ - 71480 ரூபாய், கோயம்புத்தூர் - 71360 ரூபாய், மதுரை - 71360 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,920 ரூபாய், மும்பை - 8,920 ரூபாய், டெல்லி - 8,935 ரூபாய், கொல்கத்தா - 8,920 ரூபாய், பெங்களூர் - 8,920 ரூபாய், ஹைதராபாத் - 8,920 ரூபாய், கேரளா - 8,920 ரூபாய், புனே - 8,920 ரூபாய், பரோடா - 8,925 ரூபாய், அகமதாபாத் - 8,820 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,935 ரூபாய், லக்னோ - 8,935 ரூபாய், கோயம்புத்தூர் - 8,920 ரூபாய், மதுரை - 8,920 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,731 ரூபாய், மும்பை - 9,731 ரூபாய், டெல்லி - 9,746 ரூபாய், கொல்கத்தா - 9,731 ரூபாய், பெங்களூர் - 9,731 ரூபாய், ஹைதராபாத் - 9,731 ரூபாய், கேரளா - 9,731 ரூபாய், புனே - 9,731 ரூபாய், பரோடா - 9,736 ரூபாய், அகமதாபாத் - 9,622 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,746 ரூபாய், லக்னோ - 9,746 ரூபாய், கோயம்புத்தூர் - 9,731 ரூபாய், மதுரை - 9,731 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,390 ரூபாய், மும்பை - 7,299 ரூபாய், டெல்லி - 7,311 ரூபாய், கொல்கத்தா - 7,298 ரூபாய், பெங்களூர் - 7,298 ரூபாய், ஹைதராபாத் - 7,298 ரூபாய், கேரளா - 7,298 ரூபாய், புனே - 7,299 ரூபாய், பரோடா - 7,303 ரூபாய், அகமதாபாத் - 7,217 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,311 ரூபாய், லக்னோ - 7,311 ரூபாய், கோயம்புத்தூர் - 7,390 ரூபாய், மதுரை - 7,390 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,470 ரூபாய், மும்பை - 26,470 ரூபாய், டெல்லி - 26,470 ரூபாய், கொல்கத்தா - 26,470 ரூபாய், பெங்களூர் - 26,470 ரூபாய், ஹைதராபாத் - 26,470 ரூபாய், கேரளா - 26,470 ரூபாய், புனே - 26,470 ரூபாய், வதோதரா - 26,470 ரூபாய், அகமதாபாத் - 26,470 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.10 - 8,644 ரூபாய்
குவைத் - KWD 30.38 - 8,471 ரூபாய்
மலேசியா - MYR 465 - 9,009 ரூபாய்
ஓமன் - OMR 39.40 - 8,752 ரூபாய்
கத்தார் - QAR 372 - 8,728 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 378 - 8,614 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136.30 - 8,869 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 369.50 - 8,603 ரூபாய்
அமெரிக்கா - USD 100 - 8,551 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
துபாய் (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
புஜைரா (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 369.50 - 8,603 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 372 - 8,728 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.40 - 8,752 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 378 - 8,614 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.64 - 8,435 ரூபாய்
கனடா - CAD 143 - 8,804 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 163.40 - 8,860 ரூபாய்
நேபாளம் - NPR 14,749.91 - 9,215 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 40.80 - 9,256 ரூபாய்
குவைத் - KWD 33.13 - 9,238 ரூபாய்
மலேசியா - MYR 483 - 9,358 ரூபாய்
ஓமன் - OMR 42.15 - 9,362 ரூபாய்
கத்தார் - QAR 399 - 9,361 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 409 - 9,321 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 149.80 - 9,748 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 399 - 9,290 ரூபாய்
அமெரிக்கா - USD 106.75 - 9,129 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
துபாய் (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
புஜைரா (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 399 - 9,290 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 399 - 9,361 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.15 - 9,362 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 409 - 9,321 ரூபாய்
இங்கிலாந்து - GBP 81.43 - 9,203 ரூபாய்
கனடா - CAD 151 - 9,296 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 178.30 - 9,668 ரூபாய்
நேபாளம் - NPR 16,032.51 - 10,017 ரூபாய்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று ஏற்பட்ட பெரிய ஏற்றத்திற்குப் பிறகு இன்று சற்று நிலையான வர்த்தகத்தையே கொண்டுள்ளது. ஆசிய வர்த்தக நேரத்தில் எட்டப்பட்ட வரலாற்று உச்சத்திற்கு பின்பு சிறிய அளவிலான சரிவை சந்தித்து தற்போது நிலையான வர்த்தத்தில் தொடர்ந்து 3340-3345 டாலருக்கு மத்தியல் வர்த்தகமாகி வருகிறது.
இருப்பினும், அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான சில்லறை விற்பனை குறித்த சாதகமான புள்ளிவிவரங்களும், அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் கடுமையான நாணயக் கொள்கை குறித்து வெளியிட்ட கருத்துகள் அமெரிக்க டாலருக்கு சிறிது ஊக்கத்தை அளித்துள்ளன. இதன் காரணமாக, தங்கத்தின் விலை உயர்வது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது தங்கத்தின் விலையை ஆதரிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. அமெரிக்க டாலர் தற்போது தொடர்ந்து நான்காவது வாரமாக சரிவை சந்தித்து வருகிறது. டாலரின் மதிப்பு குறையும்போது, தங்கத்தின் மதிப்பு பொதுவாக உயரும் என்பதால் தற்போது தங்கம் முக்கியமான முதலீட்டு பிரிவாக மாறியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!



Click it and Unblock the Notifications