மே 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் கிராமுக்கு 114 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் குறைந்துள்ளது. புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 9,606-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,805-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.7255-க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறியுள்ளது. சாமானியர்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது. இதைத் தடுப்பதற்காக முன்னணி நகை பிராண்டுகள் தற்போது ஒரு புது யுக்தியைக் கையாளத் தொடங்கியுள்ளன. அது என்னவென்றால் குறைந்த கேரட் மதிப்பிலான நகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இவை குறைந்த கேரட் மற்றும் குறைந்த எடையில் இருப்பதால் விலையும் குறைவாக இருக்கிறது.

ஆனால் இந்த விலை ஏற்றமே நீடித்தால் 2026-ஆம் நிதியாண்டில் விற்பனை சரிவு ஏற்படும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஏற்கனவே முன்னணி நகை பிராண்டுகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற பிராண்டுகள் 50,000-த்திற்கும் குறைவான மதிப்பிலான தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாகத் தங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளன.
இப்படி இருக்கையில் இனி வரும் காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தால், அது மேலும் விற்பனையை குறைக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால் அதிக கற்கள் பதித்த குறைந்த எடை கொண்ட நகைகளின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களின் வாங்கும் திறனில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போது சந்தைகளில் 9 கேரட் தங்கத்தை முன்னணி நகை பிராண்டுகள் அறிமுகம் செய்துள்ளன. ஏற்கனவே 18 கேரட், 22 கேரட், 24 கேரட், 14 கேரட் போன்றவற்றில் நகைகள் விற்பனையாகிறது. இதில் 24 கேரட் தங்கத்தில் தான் அதிக தூய தங்கம் இருக்கும். இது 99.9 சதவீதம் தூய தங்கத்தை கொண்டது. 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும், மீதி காப்பர் மற்றும் சில்வர் போன்ற உலோகங்கள் இருக்கும். 18 கேரட்டில் 22 கேரட் தங்கத்தை விட குறைவான தங்கம் மட்டுமே இருக்கும். இதனால் தான் 22 மற்றும் 24 கேரட் தங்கத்தை விட 18 கேரட் தங்கம் விலை குறைவு. 18 கேரட் தங்கத்தை விட 14 கேரட் மற்றும் 9 கேரட் ஆகியவை விலை குறைவு.
இன்றைய தினம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து 8,805-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 400 குறைந்த ரூ.70,440-ஆக உள்ளது. இன்று வெவ்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 70440 ரூபாய், மும்பை - 70440 ரூபாய், டெல்லி - 70560 ரூபாய், கொல்கத்தா - 70440 ரூபாய், பெங்களூர் - 70440 ரூபாய், ஹைதராபாத் - 70440 ரூபாய், கேரளா - 70440 ரூபாய், புனே - 70440 ரூபாய், பரோடா - 70480 ரூபாய், அகமதாபாத் - 70480 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,805 ரூபாய், மும்பை - 8,805 ரூபாய், டெல்லி - 8,820 ரூபாய், கொல்கத்தா - 8,805 ரூபாய், பெங்களூர் - 8,805 ரூபாய், ஹைதராபாத் - 8,805 ரூபாய், கேரளா - 8,805 ரூபாய், புனே - 8,805 ரூபாய், பரோடா - 8,810 ரூபாய், அகமதாபாத் - 8,810 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,606 ரூபாய், மும்பை - 9,606 ரூபாய், டெல்லி - 9,621 ரூபாய், கொல்கத்தா - 9,606 ரூபாய், பெங்களூர் - 9,606 ரூபாய், ஹைதராபாத் - 9,606 ரூபாய், கேரளா - 9,606 ரூபாய், புனே - 9,606 ரூபாய், பரோடா - 9,611 ரூபாய், அகமதாபாத் - 9,611 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,255 ரூபாய், மும்பை - 7,204 ரூபாய், டெல்லி - 7,217 ரூபாய், கொல்கத்தா - 7,204 ரூபாய், பெங்களூர் - 7,204 ரூபாய், ஹைதராபாத் - 7,204 ரூபாய், கேரளா - 7,204 ரூபாய், புனே - 7,204 ரூபாய், பரோடா - 7,208 ரூபாய், அகமதாபாத் - 7,208 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,000 ரூபாய், மும்பை - 27,000 ரூபாய், டெல்லி - 27,000 ரூபாய், கொல்கத்தா - 27,000 ரூபாய், பெங்களூர் - 27,000 ரூபாய், ஹைதராபாத் - 27,000 ரூபாய், கேரளா - 27,000 ரூபாய், புனே - 27,000 ரூபாய், வதோதரா - 27,000 ரூபாய், அகமதாபாத் - 27,000 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,000 ரூபாய், மும்பை - 97,900 ரூபாய், டெல்லி - 97,900 ரூபாய், கொல்கத்தா - 97,900 ரூபாய், பெங்களூர் - 97,900 ரூபாய், ஹைதராபாத் - 1,09,000 ரூபாய், கேரளா - 1,09,000 ரூபாய், புனே - 97,900 ரூபாய், பரோடா - 97,900 ரூபாய், அகமதாபாத் - 97,900 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.40 - 8,464 ரூபாய்
குவைத் - KWD 29.89 - 8,298 ரூபாய்
மலேசியா - MYR 440 - 8,709 ரூபாய்
ஓமன் - OMR 38.20 - 8,468 ரூபாய்
கத்தார் - QAR 365.50 - 8,556 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 370 - 8,419 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 131.90 - 8,643 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 360.25 - 8,367 ரூபாய்
அமெரிக்கா - USD 98 - 8,361 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
துபாய் (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
புஜைரா (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 360.25 - 8,367 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 365.50 - 8,556 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.20 - 8,468 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 370 - 8,419 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.67 - 8,130 ரூபாய்
கனடா - CAD 141 - 8,635 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 156.10 - 8,620 ரூபாய்
நேபாளம் - NPR 14,615.82 - 9,119 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 40 - 9,053 ரூபாய்
குவைத் - KWD 32.60 - 9,050 ரூபாய்
மலேசியா - MYR 458 - 9,065 ரூபாய்
ஓமன் - OMR 40.80 - 9,044 ரூபாய்
கத்தார் - QAR 392 - 9,177 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 401 - 9,124 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 144.80 - 9,489 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 389.25 - 9,041 ரூபாய்
அமெரிக்கா - USD 104.50 - 8,916 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
துபாய் (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
புஜைரா (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 389.25 - 9,041 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 392 - 9,177 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.80 - 9,044 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 401 - 9,124 ரூபாய்
இங்கிலாந்து - GBP 78.19 - 8,869 ரூபாய்
கனடா - CAD 149 - 9,125 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 170.30 - 9,404 ரூபாய்
நேபாளம் - NPR 15,886.76 - 9,912 ரூபாய்
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications