தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இம்மாத துவக்கத்தில் அதிகளவிலான தடுமாற்றம் இருந்தது, ஆனால் தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில், இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 96,100 ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்திய புல்லியன் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் இந்திய ரீடைல் சந்தையில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் என்பது சர்வதேச வர்த்தக சந்தை மற்றும் டாலர், யூரோ, பவுண்ட் நாணயங்களை பொறுத்தே அமைகிறது. தங்கம் விலை நிர்ணயத்தில் உள்நாட்டு சந்தையின் ஆதிக்கமும், பங்கீடும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் கடந்த 7 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது. இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,342 டாலராக உயர்ந்து, நான்காவது நாளாக அதன் ஏற்றத்தைத் தக்கவைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான்.
இன்று காலை வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் தடாலடியாக 0.67 சதவீதம் உயர்ந்து 96242 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். சரி தங்கம் விலை உயர்வுக்கும், டிரம்ப்-க்கும் என்ன தொடர்பு..?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இதேபோல் மத்திய கிழக்கில் பதற்றங்கள், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை ஆகியவையும் தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க முக்கியமான காரணமாக உள்ளது. பெரும்பாலான முதலீட்டு வல்லுனர்கள் இந்த நிலையற்ற காலத்தில் முதலீடுகளை செய்யாமல் பணமாக வைத்திருக்கின்றனர். பலர் எப்போதும் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்ய வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கம் மீதான முதலீட்டை 10-15 சதவீதம் வரையில் ஒதுக்கீடு செய்யலாம் என அறிவுறுத்துகின்றனர். இப்படியிருக்கையில் தங்கம் விலையின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும். தலையும் புரியாமல், காலும் புரியாமல் தங்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டத்தில் முடியலாம்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரிக் குறைப்புத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி பற்றாக்குறை உள்ளன. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அமெரிக்காவின் நீண்டகால கருவூலப் பத்திர லாபம் (Treasury Yields) கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளது.
அமெரிக்க 10 ஆண்டு கருவூலப் பத்திர லாபம் 4.58% ஆக உயர்ந்துள்ளது, இது 9.5 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்வைக் குறிக்கிறது. இதேபோல், அமெரிக்க உண்மையான லாபம் (Real Yields) 2.229% ஆக உயர்ந்துள்ளது, இதுவும் 9.5 அடிப்படை புள்ளிகள் உயர்வாகும். இந்த உயர்வு, அமெரிக்க பங்குச் சந்தைகளில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் வகையில், தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வரிக் குறைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவது குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தத் திட்டம் நிறைவேறினால், அமெரிக்காவின் தேசிய கடன் 3.8 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும் என காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் (CBO) மதிப்பிட்டுள்ளது.
இது அமெரிக்க பங்குச் சந்தைகளை உயர்த்தலாம் என்றாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மூடிஸ் (Moody's) நிறுவனம் அமெரிக்க அரசின் கடன் மதிப்பீட்டை குறைத்தது, இதனால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்து DXY குறியீடு அழுத்தத்தை சந்தித்தது. இந்தப் பொருளாதார நிச்சயமின்மை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளின் போது, தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன.
அதே நேரத்தில், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக பதற்றங்கள் 90 நாட்களுக்கு குறைக்கப்பட்ட வரிகளுடன் தற்காலிகமாக தணிந்துள்ளன. இது உலகளாவிய பொருளாதாரத்தில் சற்று நிவாரணத்தை அளித்தாலும், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications