மே 28-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 8,935 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றைய தினம் மாற்றமில்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் தங்கம் விலை 1.83 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மார்ச் மாதத்தை விட 5.46 சதவீதம் தங்க விலையில் உயர்வு காணப்பட்டது.

மே 1-ஆம் தேதி முதல் இன்றைய நாள் வரையில் அதிகபட்சமாக மே 8-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 9,130 ரூபாயை எட்டியது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 9,960 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல மே 15-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,610-ஆகக் குறைந்தது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,393-க்கு விற்பனையானது.
இந்த விலையோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் இதைவிட கடுமையான விலை உயர்வு தென்பட்டது. ஏனெனில் ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,000-த்தை தொட்டது. இதனால் நிபுணர்கள் கணித்தது போல 10 கிராம் தங்கம் ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. அன்றைய தினம் தங்கம் உண்மையிலேயே வரலாற்று உச்சத்தை எட்டியது.
இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் குறைந்து 8,935-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 71,480-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9747-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 77,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக தங்க விலை உயர்வு தொடர்கதையாக இருந்து வருகிறது. அதுவும் உலக அளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன. தங்கக் கையிருப்பை அதிகரிப்பது ஒரு நாட்டுக்கு பாதுகாப்பை வழங்கும் என்பதால் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகளும் தங்கத்தை குவித்து வருகின்றன. இதுவும் தங்க விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.
ஒருபுறம் மக்கள் சிலர் நாம் தங்கத்தை அதிக அளவில் வாங்குவதால் தான் இப்படி விலை உயர்வு ஏற்படுகிறது. அனைவரும் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டால் விலை அதுவாகவே குறைந்துவிடும் என்ற கருத்தையும் முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது.
இப்படி தங்கம் தொடர்பான பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்த விலை உயர்வு சாமானியர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கல்வி, சேமிப்பு என அனைத்திற்கும் தங்கம் வாங்கிய குடும்பங்கள் தற்போதைய விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கம் விலை 22 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதை சரி செய்யும் விதமாக முன்னணி நகை பிராண்டுகள் இணைந்து குறைந்த கேரட் மதிப்பிலான தங்கத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. ஆனாலும் இன்னமும் மக்கள் 22 கேரட் தங்கத்தில் ஆர்வம் காட்டும் அளவிற்கு குறைந்த கேரட் மதிப்பிலான நகைகளில் ஆர்வம் காட்டவில்லை. அதோடு இந்த விலை உயர்வின் காரணமாக இனி வரும் ஆண்டுகளில் தங்க விற்பனையில் சரிவு ஏற்படும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!



Click it and Unblock the Notifications