தங்கம் என்றால் நகையாக வாங்கலாம் என்ற காலம் போய், தற்போது டிஜிட்டல் தங்கம், பேப்பர் தங்கம் என பல வடிவில் வாங்கலாம் என மக்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாக தங்கம் என்றாலே நம்மவர்களுக்கு அதன் மீது ஒரு அலாதி பிரியம். இது மக்களுடன் உணர்வுபூர்வமான ஒரு உலோகமாக உள்ளது. இப்படி மக்களின் வாழ்வுடன் இணைந்துள்ள தங்கம், தற்போதைய காலக்கட்டங்களில் முதலீட்டிலும் முக்கிய அம்சம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த வகையில் கமாடிட்டி சந்தைகளில் தங்கம் முதலீடு என்பது பெரியளவில், மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். விற்றுக் கொள்ளலாம். கட்டணங்கள் குறைவு என்பதால் இது இன்னும் சாதகமாக உள்ளது. அதெல்லாம் சரி இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? மற்ற முக்கிய காரணிகள் என்னென்ன? வாங்கலாமா? வேண்டாமா? இனி எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
வாங்கினாலும் விற்றாலும் லாபம்
எம்சிஎக்ஸ் கமாடிட்டியில் பொறுத்தவரையில் தங்கத்தினை வாங்கினாலும் லாபம் உண்டு. விற்றாலும் உண்டு. ஆக விலை குறையும்போது வாங்கி வைக்கலாம். உச்சத்தில் இருக்கும்போது விற்று வைக்கலாம். இது பங்கு சந்தையினை போலவே அதிக ஏற்ற இறக்கம் உண்டு. எனினும் இன்றைய காலகட்டத்தில் பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக இந்த தங்கம் உள்ளது.
டாலர் மதிப்பு ஏற்றம்
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு, இன்று சற்றே வலுவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் தங்கத்தின் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. எனினும் இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று நிலையில் மேற்கொண்டு டாலர் மதிப்பு வலுவாக காணப்படுகிறது.
பணவீக்கம் குறித்த அச்சம்
தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைவாகவே வைத்துள்ள நிலையில், இது மேற்கொண்டு வலுவான டாலர் மதிப்பிற்கு வழிவகுத்துக் கொண்டுள்ளது எனலாம். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர சந்தையும் தொடர்ந்து வலுவாகவே காணப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன, தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க இது வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெதுவான பொருளாதார வளர்ச்சி
அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, சற்றே மெதுவான வேகத்தில் மீண்டும் வந்து கொண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது, கடந்த அக்டோபர் மாதத்தில் மெதுவான வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகின்றது. பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி கொண்டிருந்தாலும், அதிகரித்து வரும் மூலதன பொருட்கள் விலை, மூலதன பொருட்கள் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட பலவும் பொருளாதாரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக நீண்டகால நோக்கில் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிக்கும்
தொடர்ந்து அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவாகவே உள்ள நிலையில், அமெரிக்காவில் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை குறைக்கலாம். மேலும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து உள்ளிட்ட மத்திய வங்கிகள் வட்டி விகிதம் குறித்த முடிவினை விரைவில் எடுக்கலாம். இந்த நிலையில் இதுவும் தங்கத்தின் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் தேவை
இந்தியாவில் விழாக்கால பருவம், திருமண பருவம் என தொடர்ந்து தங்கத்தின் தேவையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தங்கத்தின் விலையை ஊக்குவிக்க காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே தங்கத்தினை அதிக அளவில் வாங்கும் சீனாவிலும் தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்கு எதிராக வாங்கி வைக்கப்படலாம். ஆக இதுவும் நீண்ட கால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலீட்டாளார்கள் கவனம்
குறுகிய காலத்தில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தினை, முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் கவனித்துக் கொண்டுள்ளனர்.
காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1794.55 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலை தற்போது சற்று குறைந்து அவுன்ஸூக்கு, 24.027 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது தற்போது சற்று குறைந்து இருந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடம் எனலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 67 ரூபாய் குறைந்து, 47,836 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று குறைவாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 161 ரூபாய் குறைந்து, 64,630 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 64,791 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 64,600 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4,508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 36,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4,918 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 39,344 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,180 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 68.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 689 ரூபாயாகவும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 68,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications