தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3000 உயர்வு.. பதறவைக்கும் காரணங்கள்.. இனியும் முதலீடு செய்யலாமா?!

இந்தியாவில் தங்கம் விற்பனைக்கான முக்கியமான காலகட்டம் இது, வட இந்தியப் பகுதியில் தன்தேரஸ், இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை, தீபாவளிக்கு பின் துவங்கும் என்பதால் ஒவ்வொரு வருடமும் இக்காலகட்டத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரண உலோகத்திற்கான டிமாண்ட் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை வேறு விதமாக உள்ளது, இந்த ஆண்டு துவக்கத்தில் டிரம்ப் அமெரிக்க அதிபரான நாளில் இருந்து தங்கம் உயரத் துவங்கியது, இன்று விரைவில் நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. டிரம்ப்-ன் வரி விதிப்பு, வர்த்தக போர், சீனாவின் அரிய உலோகத்தில் கட்டுப்பாடு, அமெரிக்காவில் ஷட்டவுன் என பல பிரச்சனையின் காரணமாகத் தங்கம் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலகிற்கு முக்கிய முதலீடாக மாறியுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3000 உயர்வு.. பதறவைக்கும் காரணங்கள்.. இனியும் முதலீடு செய்யலாமா?!

இதன் காரணமாகவே ஒரு வருடத்திற்கு முன்பும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2700 டாலரில் இருந்து இன்று 4375 டாலருக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தங்கம் விலை நிர்ணயம் என்பது சர்வதேசச் சந்தை விலை மற்றும் டாலர் -யூரோ மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. உள்நாட்டு வர்த்தகத்தின் தாக்கம் மிகவும் குறைவு தான்.

ஆனால் கடந்த 2 மாதங்களாக இந்தியாவிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது, இதனால் மொத்தமாகச் சேர்ந்து தங்கம் விலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. மேலும் தினமும் வரலாற்று உச்சத்தை அடைகிறது என்பது தான் சாமானிய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை யாருமே எதிர்பார்க்காத வகையில் 3000 ரூபாய் உயர்ந்து 1,22,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 3270 ரூபாய் உயர்ந்து 1,33,090 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓரே நாளில் கிராமுக்கு 300 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 2616 ரூபாய் உயர்ந்து 1,06,472 ரூபாயாக உள்ளது. தங்கத்தை வாங்க முடியாதவர்கள் அதிகளவில் வெள்ளியை வாங்கி வரும் காரணத்தால் வெள்ளிக்கான டிமாண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் தங்கத்தை விடவும் வெள்ளி மீதான முதலீட்டு லாபம் அதிகமாக உள்ளது. இன்று ரீடைல் சந்தையில் வெள்ளி விலை 3000 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2,03,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1350 ரூபாய் குறைந்து 48,200 ரூபாயாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தை பார்க்கும் போது தங்கம் விலை 30 நாளில் 11.90 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில் வெறும் 17 நாளில் 11.42 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 15 சதவீதத்தை தாண்டும் என கணிப்புகள் நிலவுகிறது.

அக்டோபர் மாதம் குறைவான விலை என்றால் 3ஆம் தேதி பதிவான 10990 ரூபாய் (22 கேரட்) அதிகப்படியான விலை அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) 12200 ரூபாயாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3000 உயர்வு.. பதறவைக்கும் காரணங்கள்.. இனியும் முதலீடு செய்யலாமா?!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னை - 97600 ரூபாய்,
மும்பை - 97360 ரூபாய்,
டெல்லி - 97480 ரூபாய்,
கொல்கத்தா - 97360 ரூபாய்,
பெங்களூர் - 97360 ரூபாய்,
ஹைதராபாத் - 97360 ரூபாய்,
கேரளா - 97360 ரூபாய்,
புனே - 97360 ரூபாய்,
பரோடா - 97400 ரூபாய்,
அகமதாபாத் - 97400 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 97480 ரூபாய்,
லக்னோ - 97480 ரூபாய்,
கோயம்புத்தூர் - 97600 ரூபாய்,
மதுரை - 97600 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னை - 12,200 ரூபாய்,
மும்பை - 12,170 ரூபாய்,
டெல்லி - 12,185 ரூபாய்,
கொல்கத்தா - 12,170 ரூபாய்,
பெங்களூர் - 12,170 ரூபாய்,
ஹைதராபாத் - 12,170 ரூபாய்,
கேரளா - 12,170 ரூபாய்,
புனே - 12,170 ரூபாய்,
பரோடா - 12,175 ரூபாய்,
அகமதாபாத் - 12,175 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 12,185 ரூபாய்,
லக்னோ - 12,185 ரூபாய்,
கோயம்புத்தூர் - 12,200 ரூபாய்,
மதுரை - 12,200 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னை - 13,309 ரூபாய்,
மும்பை - 13,277 ரூபாய்,
டெல்லி - 13,292 ரூபாய்,
கொல்கத்தா - 13,277 ரூபாய்,
பெங்களூர் - 13,277 ரூபாய்,
ஹைதராபாத் - 13,277 ரூபாய்,
கேரளா - 13,277 ரூபாய்,
புனே - 13,277 ரூபாய்,
பரோடா - 13,282 ரூபாய்,
அகமதாபாத் - 13,282 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 13,292 ரூபாய்,
லக்னோ - 13,292 ரூபாய்,
கோயம்புத்தூர் - 13,309 ரூபாய்,
மதுரை - 13,309 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னை - 10,100 ரூபாய்,
மும்பை - 9,958 ரூபாய்,
டெல்லி - 9,722 ரூபாய்,
கொல்கத்தா - 9,958 ரூபாய்,
பெங்களூர் - 9,958 ரூபாய்,
ஹைதராபாத் - 9,958 ரூபாய்,
கேரளா - 9,958 ரூபாய்,
புனே - 9,958 ரூபாய்,
பரோடா - 9,963 ரூபாய்,
அகமதாபாத் - 9,963 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 9,722 ரூபாய்,
லக்னோ - 9,722 ரூபாய்,
கோயம்புத்தூர் - 10,100 ரூபாய்,
மதுரை - 10,100 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம்
சென்னை - 48,200 ரூபாய்,
மும்பை - 48,200 ரூபாய்,
டெல்லி - 48,200 ரூபாய்,
கொல்கத்தா - 48,200 ரூபாய்,
பெங்களூர் - 48,200 ரூபாய்,
ஹைதராபாத் - 48,200 ரூபாய்,
கேரளா - 48,200 ரூபாய்,
புனே - 48,200 ரூபாய்,
வதோதரா - 48,200 ரூபாய்,
அகமதாபாத் - 48,200 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னை - 2,03,000 ரூபாய்,
மும்பை - 1,85,000 ரூபாய்,
டெல்லி - 1,85,000 ரூபாய்,
கொல்கத்தா - 1,88,900 ரூபாய்,
பெங்களூர் - 1,93,900 ரூபாய்,
ஹைதராபாத் - 2,03,000 ரூபாய்,
கேரளா - 2,03,000 ரூபாய்,
புனே - 1,85,000 ரூபாய்,
பரோடா - 1,85,000 ரூபாய்,
அகமதாபாத் - 1,85,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 49.10 - 11,451 ரூபாய்
குவைத் - KWD 39.33 - 11,315 ரூபாய்
மலேசியா - MYR 572 - 11,901 ரூபாய்
ஓமன் - OMR 50.40 - 11,509 ரூபாய்
கத்தார் - QAR 474.50 - 11,445 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 485 - 11,369 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 174.70 - 11,875 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - AED 478 - 11,441 ரூபாய்
அமெரிக்கா - USD 133 - 11,693 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
துபாய் (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
புஜைரா (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 478 - 11,441 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 474.50 - 11,445 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 50.40 - 11,509 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 485 - 11,369 ரூபாய்
இங்கிலாந்து - GBP 95.58 - 11,305 ரூபாய்
கனடா - CAD 186.50 - 11,666 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 209.20 - 11,887 ரூபாய்
நேபாளம் - NPR 10,891.80 - 6,790 ரூபாய்
சீனா - CNY 878.80 - 10,840 ரூபாய்
பாகிஸ்தான் - PKR 34,194.30 - 10,606 ரூபாய்
பங்களாதேஷ் - BDT 14,989.80 - 10,824 ரூபாய்
இலங்கை - LKR 40,620 - 11,786 ரூபாய்
ரஷ்யா - RUB 9,808.10 - 10,795 ரூபாய்
ஜப்பான் - JPY 18,638.50 - 10,959 ரூபாய்
ஜெர்மனி - EUR 106.10 - 10,920 ரூபாய்
பிரான்ஸ் - EUR 106.10 - 10,920 ரூபாய்
நியூசிலாந்து - NZD 215.70 - 10,865 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 52.60 - 12,267 ரூபாய்
குவைத் - KWD 42.82 - 12,319 ரூபாய்
மலேசியா - MYR 597 - 12,422 ரூபாய்
ஓமன் - OMR 54.05 - 12,343 ரூபாய்
கத்தார் - QAR 511 - 12,325 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 526 - 12,330 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 192.30 - 13,071 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - AED 516 - 12,351 ரூபாய்
அமெரிக்கா - USD 140 - 12,309 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
துபாய் (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
புஜைரா (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 516 - 12,351 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 511 - 12,325 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 54.05 - 12,343 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 526 - 12,330 ரூபாய்
இங்கிலாந்து - GBP 104.27 - 12,333 ரூபாய்
கனடா - CAD 196.75 - 12,307 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 228.20 - 12,966 ரூபாய்
நேபாளம் - NPR 11,882.10 - 7,408 ரூபாய்
சீனா - CNY 958.70 - 11,825 ரூபாய்
பாகிஸ்தான் - PKR 37,302.80 - 11,570 ரூபாய்
பங்களாதேஷ் - BDT 16,352.60 - 11,808 ரூபாய்
இலங்கை - LKR 44,310 - 12,856 ரூபாய்
ரஷ்யா - RUB 10,699.80 - 11,776 ரூபாய்
ஜப்பான் - JPY 20,332.70 - 11,955 ரூபாய்
ஜெர்மனி - EUR 115.70 - 11,908 ரூபாய்
பிரான்ஸ் - EUR 115.70 - 11,908 ரூபாய்
நியூசிலாந்து - NZD 235.20 - 11,847 ரூபாய்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3000 உயர்வு.. பதறவைக்கும் காரணங்கள்.. இனியும் முதலீடு செய்யலாமா?!

இந்தியாவில் இந்த பண்டிகை காலம், திருமண சீசன் ஆகியவற்றின் மூலம் உருவாகியிருக்கும் டிமாண்ட் குறைந்தாலும், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீண்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா - சீனா மத்தியில் துவங்கியிருக்கும் வர்த்தக போர் தான். நவம்பர் 1 முதல் அமெரிக்கா சீனா மீது 100 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டு இருக்கும் வேளையில், சீனா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால் தங்கம் விலை அடுத்த சில வாரங்களுக்கு உயர்வுடன் காணப்பாட்டாலும் விலை குறைவதற்கான சாத்தியகூறுகளும் உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் உங்கள் நிதி நிலை, போர்ட்போலியோ, ரிஸ்க் தாங்கும் அளவீடுகளை ஆய்வு செய்து உங்களுடைய நிதி ஆலோசகர்களுடன் முறையாக ஆலோசனை பெற்று முதலீடு செய்வதே உத்தமம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+