இன்று மார்ச் 3 ஆம் தேதி தங்கம் விலை ஆனது எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. மாதம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து இன்று 3ஆம் நாளாக அதே விலையில் உள்ளது. இது நகை வாங்கும் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி கிராமுக்கு 20 ரூபாய் என ஏற்றம் கண்ட தங்கம், அதற்கு பிறகு விலை மாறவில்லை. இதனால், இன்று நகை வாங்குவோர் ஆர்வத்துடன் நகை கடைகளுக்கு சென்று வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (02/03/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,940-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,400-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,662-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,296-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,620-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,501-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,008-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,501-க்கும் விற்பனையானது.
இன்றைய (03/03/2025) தங்கம் விலை நிலவரம்: இன்றைய நிலவரத்தை பொறுத்தவரையில், சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.7,940-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,400-க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தங்கமும் இன்று விலை மாறவில்லை. அதன்படி 1 கிராம் ரூ. 8,662-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,296-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,620-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,540-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,320-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,400-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றம் செய்யவில்லை. 1 கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,05,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications