தமிழ்நாட்டில் தங்கம் விலை ஆனது கடந்த ஒரு வாரமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 6 நாட்களில் ஒரு கிராம் 22 கிராம் தங்கம் ஆனது ரூ.295 ஆக உயர்ந்தது. அதேபோல், ஒரு சவரன் ரூ.2000 வரையும் உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையும் வகையில் விலை ஏறி வந்தது. ஆனால், இன்று அனைவருக்கும் சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. தங்கத்தை எல்லோரும் ஒரு முதலீடாகவும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தங்கத்தை தினமும் வாங்குபவர்களும் இருக்கின்றனர்.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7790 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்றும் தங்கம் விலை மாறாமல் அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,790-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.17 அதிகரித்து ரூ.8,498-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (01/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,790-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.62,320-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,900-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,498-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.67,984-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 84,980-க்கும் விற்பனையானது.
இன்றைய (02/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ஆனது எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.7,790 ஆகவும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 62,320 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,900-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,498-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.67,984-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.84,980 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,079-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,636-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.60,795-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்று விலை மாறவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 1கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications