செப்டம்பர் மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை மாற்றமடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முதல் 3 வாரங்களில் விலை ஏற்றத்துடன் இருந்த தங்கம் கடைசி வாரத்தில் சரிவுடன் காணப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத தொடக்கம் எப்படி இருக்கிறது, தங்கம் விலை உயர்ந்ததா அல்லது குறைந்ததா என தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 120 ரூபாய் விலை கூடி 1,15,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் தங்கம் விலை கிராமுக்கு 1114 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரனுக்கு தங்கம் விலை 8,912 ரூபாய் விலை கூடியது. இநிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே விலை ஏற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 15,693 ரூபாய்க்கும் 10 கிராம் 1,56,930 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,145 ரூபாய்க்கும் ஒரு சவரன் 97,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாயும் விலை சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிராம் வெள்ளி 25 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளி 25,000 ரூபாயும் உயர்ந்தது.
இந்த மாதம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் செயல்பாடுகள், ஈரான் அமெரிக்கா போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் தங்கம் , வெள்ளி விலைகள் மாறும். இந்தியாவில் இனி வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்பதால் விலை உயர வாய்ப்புள்ளது. பல்வேறு தரகு நிறுவனங்களும் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் உயரும் என்றே கணிக்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்கு ஏற்ற இறக்கத்துடனும் பின்னர் ஏறுமுகமாகவும் நீடிக்கும் என கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

