Gold Rate: ரூ.1 லட்சம் இருந்தால் இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்கலாம்?

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை லேசாக குறைந்து மக்களுக்கு ஆறுதல் தந்துள்ளது. இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் விலை சரிந்து 14,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 120 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: ரூ.1 லட்சம் இருந்தால் இன்றைய விலைக்கு எவ்வளவு கிராம் தங்கம் வாங்கலாம்?

கடந்த வாரத்தில் திங்கள் , செவ்வாய், வியாழன்ஆகிய மூன்று நாட்கள் விலை குறைந்த தங்கம் , புதன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் விலை உயர்ந்தது. குறிப்பாக வெள்ளி மற்றும் சனி என இரண்டு நாட்களில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 275 ரூபாய் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரத்துக்கு உங்களிடம் 1 லட்சம் ரூபாய் இருந்தால் 10% மற்றும் 3% ஜிஎஸ்டி சேர்த்து 22 கேரட் ஆபரண தங்கம் 6.18 கிராமை வாங்க முடியும்.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 16 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15568 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,680 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,040 ரூபாயும், ஒரு சவரன் 96,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை.ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.60 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாட்களில் கிராமுக்கு 10 ரூபாயும் கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை உயர்வு கண்டது. இன்று மாறவில்லை.

Recommended For You

ஈரான் போர் தொடர்பாக நிலவும் குழப்பங்கள் தான் தங்கம், வெள்ளி விலை பெரிய அளவில் மாறாமல் இருக்க முக்கிய காரணம். அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தியதால் கடந்த வாரம் தங்கம் விலை குறைந்தது. ஆனால் அதன் பின்னர் ஈரானில் மீண்டும் அமெரிக்கா - ஈரான் தரப்பு மோதலை தொடங்கியதால் விலை சரிந்தது. இந்த வாரம் ஈரான் போரின் போக்கை தொடர்ந்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை பார்க்கலாம். ஆனால் இந்த மாதத்தில் இந்த 20 நாட்களில் தங்கம் , வெள்ளி விலைகள் பெரிதாக மாறாமல் குறிப்பிட்ட விலை வரம்பிலேயே ஏறி இறங்கி வருகின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+