Gold Rate Today: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. குழப்பத்தில் மக்கள்..!!

சென்னையில் நேற்று விலை உயர்ந்த தங்கம் இன்று தடாலடியாக விலை சரிந்துவிட்டது. இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகமாக தங்கம் விலை இருக்கிறது. இன்று தங்கம் விலை என்ன ? சென்னை, கோவை , மதுரை நகரங்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 125 ரூபாய் விலை குறைந்து 14,145 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 1000 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate Today: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. குழப்பத்தில் மக்கள்..!!

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 136 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,431 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,310 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,915 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செப்டம்பர் 1 முதல் இன்று வரையிலான 9 நாட்களில் தங்கம் விலை 5 நாட்கள் குறைந்துள்ளது, 3 நாட்கள் உயர்ந்துள்ளது, 1 நாள் விலை மாறவில்லை. இந்த வாரத்திலேயே திங்கள் அன்று விலை சரிந்தது, ஆனால் நேற்று விலை கூடியது, இந்நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. இந்த மாதம் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கமாகவே இருக்கிறது.

இதனால் இந்த மாதம் தங்கம் விலை இப்படி ஏற்ற இறக்கமாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஈரான் போரின் போக்கு , கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் , மத்திய வங்கிகளின் வட்டி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்.ஈரான் போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை லேசாக உயர்ந்ததே இன்று தங்கம் விலை குறைய காரணம். இனி வரும் நாட்கள் ஈரான் போர் தீவிரமடைந்தால் தங்கம் விலை குறையும், நிலைமை சீரானால் தங்கம் விலை உயரும்.

வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.கடந்த 6 நாட்களாக வெள்ளி விலை மாறவில்லை. அதாவது 3ஆம் தேதியில் இருந்து வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

உலக சந்தையிலும் இன்று தங்கம் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் 4,382 டாலருக்கு வர்த்தகமாகிறது, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 66 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை உயர்ந்து 1,52, 697 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+