தங்கம் விலை சர்வதேச சந்தையில் இன்று சிறிய அளவில் குறைந்துள்ளது, ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 4,993.44 டாலர் விலையில் வர்த்தகமாகிறது. நேற்றை வர்த்தக முடிவின் விலையை காட்டிலும் 0.13% சரிந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 77.9235 டாலராக குறைந்து 0.74% சரிவை பதிவு செய்துள்ளது. இந்திய MCX சந்தையில் ஏப்ரல் மாதம் முடியும் தங்க ஃப்யூச்சர்ஸ் காலை 9:25 மணியளவில் 0.08% குறைந்து 10 கீராம் 24 கேரட் தங்கம் விலை 1,54,700 ரூபாயாக உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் முடியும் வெள்ளி ஒப்பந்தங்கள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான 2,41,400 ரூபாயாக வர்த்தகமாகின்றன.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனால் தங்கத்தில் எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது தங்கம் விலை தொடர்ந்து குறையும்போது வாங்குவதை காட்டிலும், தங்கம் விலை சரிவில் இருந்து நிலைபெற்ற பின்பும், உயரும் தருவாயில் வாங்கும் போது தான் தங்கம் முதலீட்டில் லாபம் பார்க்க முடியும்.
இந்த உயரும் தருவாயை கண்டறிய உள்நாட்டு விவகாரம் முதல் வெளிநாட்டு விவகாரம் வரையில் கண்காணிக்கப்பட வேண்டும். பங்குகளை ஒரிரு காரணிகள் அடிப்படையில் தங்கம் விலை உயராது, தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது, ரூபாய் மதிப்பில் துவங்கி அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை, உலக நாடுகள் மத்தியில் போர் வரையில் தங்கத்திற்கு தொடர்பு உள்ளது.
ஈரான்-அமெரிக்கா பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தலாம் என்று சில செய்தி வெளியிட்டுள்ளன. இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஜியோபாலிடிக்ஸ் பதற்றம் தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துக்களுக்கு தேவையை அதிகரிக்கிறது. இதேவேளையில் அமெரிக்கா அரசு ஈரானுக்கு அணுசக்தி ஒப்பந்தத்தில் 2 வார கால அவகாசம் கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அணு ஒப்பந்தம் தொடர்பான அச்சுறுத்தல்களும் சந்தையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய போர் சூழலிலும், அச்சமும் தங்க விலை உயர்வுக்கு நல்ல சிக்னலாக அமைந்துள்ளது.
அமெரிக்க வட்டி குறைப்பு
அமெரிக்காவில் வாராந்திர வேலைவாய்ப்பு கோரிக்கை (jobless claims) தரவு ஐந்து வார குறைந்த அளவை எட்டியுள்ளது. இது அமெரிக்க தொழிலாளர் சந்தை நிலையாக இருப்பதை காட்டுகிறது. இதனால் பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது.
மேலும் CME FedWatch கருவியின்படி, ஜூன் மாத கூட்டத்தில் வட்டி குறைப்பு வாய்ப்பு 50%ஆக உள்ளது. ஜனவரி FOMC கூட்ட குறிப்புகள் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. சிலர் பணவீக்கம் குறைந்தால் குறைப்பு செய்யலாம் என்றும், மற்றவர்கள் விலை அழுத்தம் தொடர்ந்தால் உயர்த்தலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் கெவின் வார்ஷ் வந்தாலும் வட்டி குறைப்புக்கான வாய்ப்பும், எண்ணிக்கையும் குறைவாக தான் இருக்கும் என முதலீட்டு சந்தையில் கருத்து நிலவுகிறது.
டாலர் - ரூபாய் மதிப்பு
டாலர் இன்டெக்ஸ் 98ஐ எட்டியுள்ளது. இது நான்காவது நாளாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் 1%க்கும் மேல் உயர்வு கண்டுள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இது தங்கம், வெள்ளி விலையை இந்தியாவில் பாதிக்கும் ஒரு காரணியாக உள்ளது.
மொத்தத்தில், தங்கம் விலை ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் பதற்றம் மற்றும் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி குறைப்பு எதிர்பார்ப்புக்கு மத்தியில் தடுமாறி வருகிறது. ஈரான்-அமெரிக்கா அச்சம், சீனா தங்கம் கொள்முதல் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம். இன்று வெளியாகும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவு, PCE பணவீக்க அறிக்கை ஆகியவை மேலும் தெளிவு அளிக்கும்.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |



Click it and Unblock the Notifications