தமிழ்நாட்டில் கடந்த வாரம் முழுவதும் வேகமாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று லேசாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக விலை ஏறியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் விலை உயர்ந்து 13,085 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 120 ரூபாய் விலை கூடி 1,04,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் திங்கள்கிழமை லேசாக விலை உயர்ந்த தங்கம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாட்களும் பெரிய சரிவை சந்தித்தது. பின்னர் சனிக்கிழமை கிராமுக்கு 10 ரூபாய் விலை கூடியது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையான 1.34 லட்சத்தை விட 30,000 ரூபாய் விலை சரிவில் தான் இருக்கிறது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,275 ரூபாய்க்கும் 10 கிராம் 1,42,750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,705 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு தங்க நகை வாங்கும் கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல முதலீடு செய்ய விரும்புவோருக்கும் இது சிறந்த தருணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 220 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.20 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. நீண்ட மாதங்களுக்கு பின் வெள்ளி இப்படி பெரும் சரிவில் இருக்கிறது.அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதில் வட்டி உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம், வெள்ளி விலைகள் கடந்த வாரம் பெருமளவில் சரிந்தன.
முதலீட்டாளர்கள் வட்டி லாபம் தராத தங்க முதலீட்டை கைவிட்டு பத்திரங்களின் பக்கம் செல்கின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து ஒரு அவுன்ஸ் 4,012 டாலர்களாக உள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை பெரிதாக ஏறாமல் இருப்பதே இந்தியாவிலும் தங்கம் விலை பெரிதாக மாறாமல் இருக்க காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

