தங்கம் விலை இனி என்னவாகுமோ.. 10 வருடத்திற்கு பிறகு $1900 தொட்ட தங்கம்..!

தங்கம் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சம் கண்டு வருகிறது. அதிலும் நாட்டில் ஊரடங்கின் மத்தியிலும் இந்த புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.

சொல்லப்போனால் தமிழகத்தில் வரலாறு காணாத அளவு சவரனுக்கு 38,000 ரூபாயினை தொட்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இன்று உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வருகின்றது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றது.

உச்சம் தொட்ட தங்கம் விலை

உச்சம் தொட்ட தங்கம் விலை

இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1,900 டாலரினை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த 2011க்கு பிறகு தங்கம் விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வர்த்தகமாகியுள்ளது.

தங்கம் விலைக்கு ஆதரவு

தங்கம் விலைக்கு ஆதரவு

நீடித்து வரும் தொற்று நோய் காரணமாக சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்க, நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டாலும் அது எந்தளவுக்கு மீட்கப்படும்? என்ற உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இடைவெளி தங்கம் விலையினை ஆதரித்தும் வருகிறது.

டாலரின் மதிப்பு சரிவு

டாலரின் மதிப்பு சரிவு

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் பாரிய பணப்புழக்கத்திற்காக நிதி ஊக்கத்தினை அளித்து வருகின்றன. வட்டி குறைப்பையும் செய்து வருகின்றன. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் சரிந்து வருகிறது. மேலும் அரசாங்க பத்திரங்களின் விளைச்சல் வீழ்ச்சியடைவதையடுத்து, அதற்கு பதிலாக தங்கம் முதலீடுகள் மூலம் சரி செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

இது தங்கம் விலையானது கடந்த 2011 -லிருந்து ஒப்பிடும்போது தற்போது மிக அதிகமாகும். அதே நேரத்தில் வெள்ளியின் விலையானது நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வாராந்திர ஏற்றம் கண்டுள்ளது. இதோடு சிகாகோவில் உள்ள RJO ப்யூச்சர்ஸ் வர்த்தகர் ஒருவர், தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொடலாம் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை 2,000 டாலரினை தொடலாம்

தங்கம் விலை 2,000 டாலரினை தொடலாம்

இதே மற்றொரு அறிக்கையில் தங்கம் விலையானது 2021 வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது செப்டம்பர் இறுதிக்குள் அவுன்ஸூக்கு 2,000 டாலரினை தொடலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருக்கும்போது தங்கம் ஒரு கவர்ச்சியான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆக நிலவி வரும் நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையானது புதிய உச்சம் தொட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+