தங்கம் விலையானது சமீப நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இது தங்கம் வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வந்தது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் தங்கம் விலை உயர்வு சாமனியர்களை தங்கம் வாங்க விடாமல் செய்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி, தங்கம் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதால், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதியாக உள்ளனர்.
இன்றும், நாளையும் சுபமூகூர்த்த தினங்கள் வரவுள்ளது. இந்த சமயத்தில் தங்கம் விலை ஆனது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் தங்கம் வாங்குவோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வார காலமாக, தங்கம் விலை ஆனது சவரனுக்கு ரூ.930 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7,945 ஆக இருந்தது. அதன்படி, இன்றும் 1 கிராம் 22 கேரட் தங்கம் அதே விலையில் நீடிக்கிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கமும் நேற்று ரூ.8,667-க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.
நேற்றைய (08/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,945 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,450-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,667-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.69,336-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,670-க்கும் விற்பனையானது.
இன்றைய (09/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,945-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,450-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,667-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.69,336-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,670 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,560-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,560-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.65,600-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையை பொருத்தவரையில் கடந்த 4 நாட்களாகவே விலை மாறாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதன்படி, நேற்று விற்பனையான ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக விற்கப்பட்டது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications