தங்கம் விலை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தங்கம் இப்போது வாங்கலாமா..?

இந்தியாவில் தங்கம் விலை உயர முக்கியமான காரணம் சர்வதேச சந்தை விலையும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் தான் என்பது தமிழ் குட்ரிட்டன்ஸ் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் குறியீடு, அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு 3 வார உச்சத்தை தொட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் வெளியேற துவங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும், MCX பியூச்சர்ஸ் மார்கெட் சந்தையிலும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டாலும் ரிடைல் சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது சாமானிய மக்களுக்கு பெறும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தங்கம் விலை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தங்கம் இப்போது வாங்கலாமா..?

தங்கத்தை முக்கிய முதலீடாக பார்த்து அதிகப்படியான முதலீடுகளை செய்துள்ள அனைவருக்கும் டாலர் விலை உயர்வு பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. இதேவேளையில் தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் ரீடைல் சந்தையில் தற்போது தங்கம் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1972 டாலரில் இருந்து 1950 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதை ரூபாயில் கணக்கிட்டால் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1,62,204 ரூபாயில் இருந்து 160,989 ரூபாயாக உள்ளது.

எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.62 சதவீதம் அதிகரித்து 59,711.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளிக்கான ஆர்டர் விலை 0.85 சதவீதம் சரிந்து 74,785 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 55,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் உயர்ந்து 60,760 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 44,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 81,000 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,700 ரூபாய், மும்பை - 55,400 ரூபாய், டெல்லி - 55,550 ரூபாய், கொல்கத்தா - 55,400 ரூபாய், பெங்களூர் - 55,400 ரூபாய், ஹைதராபாத் - 55,400 ரூபாய், கேரளா - 55,400 ரூபாய், புனே - 55,400 ரூபாய், பரோடா - 55,450 ரூபாய், அகமதாபாத் - 55,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,550 ரூபாய், லக்னோ - 55,550 ரூபாய், கோயம்புத்தூர் - 55,700 ரூபாய், மதுரை - 55,700 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,760 ரூபாய், மும்பை - 60,440 ரூபாய், டெல்லி - 60,570 ரூபாய், கொல்கத்தா - 60,440 ரூபாய், பெங்களூர் - 60,440 ரூபாய், ஹைதராபாத் - 60,440 ரூபாய், கேரளா - 60,440 ரூபாய், புனே - 60,440 ரூபாய், பரோடா - 60,490 ரூபாய், அகமதாபாத் - 60,490 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,570 ரூபாய், லக்னோ - 60,570 ரூபாய், கோயம்புத்தூர் - 60,760 ரூபாய், மதுரை - 60,760 ரூபாய்.

தங்கம் விலை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தங்கம் இப்போது வாங்கலாமா..?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44560 ரூபாய், மும்பை - 44320 ரூபாய், டெல்லி - 44440 ரூபாய், கொல்கத்தா - 44320 ரூபாய், பெங்களூர் - 44320 ரூபாய், ஹைதராபாத் - 44320 ரூபாய், கேரளா - 44320 ரூபாய், புனே - 44320 ரூபாய், பரோடா - 44360 ரூபாய், அகமதாபாத் - 44360 ரூபாய், ஜெய்ப்பூர் - 44440 ரூபாய், லக்னோ - 44440 ரூபாய், கோயம்புத்தூர் - 44560 ரூபாய், மதுரை - 44560 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81000 ரூபாய், மும்பை - 78000 ரூபாய், டெல்லி - 78000 ரூபாய், கொல்கத்தா - 78000 ரூபாய், பெங்களூர் - 75500 ரூபாய், ஹைதராபாத் - 81000 ரூபாய், கேரளா - 81000 ரூபாய், புனே - 78000 ரூபாய், பரோடா - 78000 ரூபாய், அகமதாபாத் - 78000 ரூபாய், ஜெய்ப்பூர் - 78000 ரூபாய், லக்னோ - 78000 ரூபாய், கோயம்புத்தூர் - 81000 ரூபாய், மதுரை - 81000 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+