தங்க விலை வெறும் இரண்டே வாரங்களில் பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்து மக்களை மீண்டும் கலங்கடித்துள்ளது. ரீடைல் சந்தையில் நவம்பர் 18 அன்று 10 கிராம் தங்கம் 1,22,351 ரூபாயாக இருந்த நிலையில் டிசம்பர் 3 அன்று 1,31,350 ரூபாயைத் தொட்டுள்ளது. அதாவது 15 நாளில் தங்கம் விலை 8,999 ரூபாய் உயர்வடைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் கடந்த 3 வாரங்களாக உயர்வு பாதையில் இருக்க முக்கிய காரணம் உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை இருப்பதால் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக மீண்டும் முதலீட்டாளர்கள் பார்க்கத் துவங்கியுள்ளனர். இதோடு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ம் வட்டி குறைப்புக்கான எதிர்பார்ப்பு டாலரைப் பலவீனப்படுத்தித் தங்க விலையை உயர்த்தியுள்ளது.

இதோடு பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, இந்தியாவில் திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களுக்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தைப்போலவே வெள்ளியும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை 10 கிராம் ரூ.1.5 லட்சம் எட்டுமான என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலும், கணிப்பும் தான் தங்க முதலீட்டுச் சந்தையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும்.
ஆக்மாண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் ரேனிஷா செய்னானி கூறுகையில், தங்கம் விலை தற்போது 1,30,000 முதல் 1,32,000 ரூபாய் என்ற ரெசிஸ்டன்ஸ் அளவில் உள்ளது. இந்த நிலையைத் தாண்டினால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காணலாம்.
தங்கம் விலை ரூ.1.5 லட்சம் விலையை 2026-ல் எட்டுவது சாத்தியம் என்றாலும், விரைவில் இந்த உயரத்தை எட்ட வட்டி விகித குறைப்பு, திருமண சீசன், மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் ஆகியவற்றைக் கடந்து புதிய மற்றும் பெரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே விரைவாக 1.5 லட்சம் அளவீட்டை எட்ட முடியும் என்று ரேனிஷா தெரிவித்தார்.
இதேவேளையில் தங்க விலை இப்போது உயர்ந்திருந்தாலும், குறுகிய காலத்தில் சிறு சரிவு வரலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் நீண்ட காலத்தில் தங்கம் ஏறும் என்ற பார்வைதான் அனைத்து தரப்பினரிடமும் வலுவாக உள்ளது. உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை, அரசியல் பிரச்சினைகள் இருப்பதால் தங்கத்தின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை. இந்தியாவில் திருமண சீசன், பொங்கல் பண்டிகை வருவதால் தங்கம் வாங்குகிறது மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது 2 விஷயம் தான்.
1. தங்கம், வெள்ளி விலை 2025ஆம் ஆண்டில் உயர்ந்தது போல் அதிரடியாக2026லும் உயர்வதற்கான வாய்ப்பு தற்போதைய பொருளாதார - வர்த்தக சூழ்நிலையில் மிகவும் குறைவு.
2. இதேவேளையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான சூழ்நிலை உலகளவில் இருந்து வருவதால் தங்கம் விலை உயர்வுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த உயர்வு மிதமான அளவில் மட்டுமே இருக்கும் என்பது நிபுணர்களின் கணிப்பு.
ஆக மொத்தம், தங்கத்தில் முதலீடு செய்வோர் தங்களது போர்ட்போலியோவில் அதிகபட்சம் 10-12 சதவீதம் தங்கத்தில் வைக்கலாம். புதிதாக முதலீடு செய்வோர் தங்கம் விலையில் ஏற்படும் சரிவின் போது வாங்குவது கூடுதல் லாபத்தைக் கொடுக்கும், அதேபோல் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு நீண்ட கால அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
குறுகிய கால முதலீட்டுக்கு தங்கம் தற்போதைய சூழ்நிலையில் செட் ஆகாது, அப்படி முதலீடு செய்தால் பெரிய லாபத்தை இதில் பார்க்க முடியாது. இதேபோல் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுடைய நிதி நிலையை ஆய்வு செய்து, சந்தை ஏற்ற இறக்கத்தை கணக்கிட்டு முதலீடு செய்யவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications