தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி கடுமையான ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்கத்தை அதிகம் விரும்புவர்கள் விலை ஏற்றம் பற்றியும் கவலைப்படாமல் வாங்குவதும் உண்டு. அதுவே சாமானிய மக்கள் விலை குறைந்தால் மட்டுமே தங்கத்தை வாங்க முடியும். இது அவர்களுக்கு இன்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7970 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை ரூ.65 அதிகரித்து ரு.8035 ஆகவே உள்ளது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் நேற்று ரூ.8694-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.71 அதிகரித்து அதே விலையில் ரூ.8,765 ஆக விற்பனையாகிறது.

நேற்றைய (18/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7970 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,760-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,700-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,694-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.69,552-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,940-க்கும் விற்பனையானது.
இன்றைய (19/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் சுமார் ரூ.65 அதிகரித்து ரூ.8035-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் ரூ.520 அதிகரித்து ரூ. 64,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.950 அதிகரித்து ரூ.80350-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,694-ல் இருந்து ரூ.71 அதிகரித்து ரூ.8765 ஆகவும் 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.568 அதிகரித்து ரூ.70,120-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,070-ல் இருந்து ரூ.1580 அதிகரித்து ரூ.87,650 விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,393-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,150-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.63,937-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஆனது இன்றும் நேற்றைய விலையிலேயே உள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,08,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications