தங்கம் எப்போதுமே ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், தங்கத்தை விடவும் அதிக வருமானம் அல்லது லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் தங்கம் மீதான முதலீட்டை வெளியேற்றுவதில் யாரும் தயங்குவதில்லை.
இந்த பார்முலா அடிப்படையில் தான் OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்ததையடுத்து 48 மணிநேரம் கூட முழுசாக முடியாத நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த தடாலடி உயர்வுக்கு மத்தியில் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி கச்சா எண்ணெய் மீதும், கரன்சி சந்தையிலும், பங்குச்சந்தையிலும் குவிந்துள்ளது. இதன் விளைவு தங்கம் விலை சரிவு....
தங்கம் விலை
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத பியூச்சர்ஸ் ஆர்டரின் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.37 சதவீதம் சரிந்து 59,389.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.73 சதவீதம் சரிந்து 71,689.00 ரூபாயாக சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று எம்சிஎஸ் சந்தையில் அதிகப்படியாக 300 ரூபாய் சரிந்து 59,100 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தை
இதே நேரத்தில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் விலை 1973 டாலரில் இருந்து 1950 டாலர் வரையில் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தாக்கம் தங்கம் விலையை பெரிய அளவில் குறைத்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி
இந்திய சந்தையை பொறுத்த வரையில் தங்கம் மற்றும் வெள்ளி என்பது வெளிநாட்டு இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுவதன் வாயிலாக, டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றமும் தங்கம் விலையில் முக்கிய காரணியாக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை
இந்த வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் டாலர் இன்டெக்ஸ் இன்று 0.43 சதவீதம் அதிகரித்து 10.2.93 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மார்ச் 30 ஆம் தேதி டாலர் இன்டெக்ஸ் அளவு 102.03 ஆக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெய் உயர்வால் 103-ஐ நெருங்கியுள்ளது.
டாலர் மதிப்பு
டாலர் மதிப்பு அதிகரித்தால் ரூபாய் மதிப்பு சரியும், இதனால் தங்கத்திறக்கு கூடுதல் தொகையை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும் இந்திய ரீடைல் சந்தையில் விலை சரிவின் தாக்கம் முழுமையாக பெற முடியாது என்பது வருத்தமான விஷயம்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்..?
எனவே தங்க நகை வாங்குவோருக்கு தொடர் விலை உயர்வுக்கு மத்தியில், தற்போது ஏற்பட்டு உள்ள விலை சரிவு என்பது பெரும் ஜாக்பாட். இந்த சூழ்நிலையில் தங்கத்தை பொருத்த வரையில் buy on dips என்ற கொள்கை சரியாக இருக்கும். இதேபோல் தங்கத்தை விற்பனை செய்ய சரியான தருணமில்லை என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications