தங்கம் வாங்குவோருக்கு இன்று அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று பிப்ரவரி 17ஆம் தேதி தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கத்தை முதலீடாகவும், ஆபரணங்களாகவும் வாங்குவோர்கள் அதிகமாக உள்ள நிலையில் தேவை அதிகரித்து வருகிறது. எனவே தங்கம் விலை குறையுமா? என்ற ஏக்கத்தில் உள்ளவர்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7907 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை ரூ.50 அதிகரித்து ரு.7940 ஆகவே உள்ளது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் நேற்று ரூ.8607-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.54 அதிகரித்து அதே விலையில் ரூ.8,661 ஆக விற்பனையாகிறது.

நேற்றைய (17/02/2025) தங்கம் விலை நிலவரம்: நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் விலை மாறாமல் இருந்தது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7890 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.78,900-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,607-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.68,856-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,070-க்கும் விற்பனையானது.
இன்றைய (18/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் சுமார் ரூ.50 அதிகரித்து ரூ.7,940-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் ரூ.400 அதிகரித்து ரூ. 63,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.500 அதிகரித்து ரூ.79,400-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,607-ல் இருந்து ரூ.54 அதிகரித்து ரூ.8661 ஆகவும் 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.432 அதிகரித்து ரூ.69,288-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,070-ல் இருந்து ரூ.540 அதிகரித்து ரூ.86610 விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,450-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,606-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.64,507-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஆனது இன்றும் நேற்றைய விலையிலேயே உள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,08,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications