சென்னை: சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி 2024 நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,705 க்கும், 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,315 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். இந்தியாவில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வது இரண்டு வகையில் மக்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறும் மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. தங்கத்தின் மதிப்பு ஏறும்போது அதே அளவிற்கு நீங்கள் ஒரு பெரிய தொகையை கடனாக பெற முடியும்.

இது குறித்து பேசிய ரேடியன் ஃபின்சர்வ் நிறுவனர் சர்மா, தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதனால் கடன் வாங்குபவர்களுக்கு, தங்கள் கடன்களின் மூலம் சொத்துகளை மேம்படுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தங்கம் பிரதிபலிக்கிறது. மேலும், தங்கத்தில், முதலீடு செய்வது நிலையான முதலீடாக நம்பப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தங்க நகை கடன்கள் ஏன் மக்களிடையே பிரபலமாக உள்ளது?: அவசர தேவைகளுக்கு தங்களிடம் உள்ள நகைகளை வைத்து பணம் பெறுவது நம்மில் பலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இதனால் யாரிடமும் சென்று கடன் கேட்காமல் நம்முடைய சொந்த நகைகளை வைத்து எளிதில் பணம் பெற முடியும்.
அது மட்டுமில்லாமல் EMIகள் போன்ற எந்த வங்கி கடன்களிலும் நாம் மாட்டாமல் இருக்க முடியும். மேலும் மூன்று அல்லது ஆறு மாத இடைவெளிக்குள் நாம் சிறிய தொகையை நகையின் மேல் செலுத்தி, எளிதில் அடமானம் வைத்த நகையை வீட்டிற்கு எடுத்து வர முடியும்.
மேலும் தங்க நகை கடன் மக்களிடம் பிரபலமாக இருப்பதற்கான மற்றொரு காரணம் அதன் விரைவுத்தன்மை. நாம் வங்கிகளில் கடன் பெற சில நாட்கள் செலவிட வேண்டி இருக்கும். ஆனால், நாம் நகைகளை கொண்டு, உடனே அருகில் உள்ள அடமானக் கடைகளுக்குச் சென்று எளிதில் பெற முடியும்.
மறுபுறம் தங்க கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க சலுகைகளை வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி குறைவான வட்டியில் கோல்ட் லோன்களைப் பெற முடியும்.
கடன் வாங்குபவர்கள் தொடர்ந்து ஒரு நம்பகமான நிதி திரட்டும் வழியை தேடுகின்றனர். அதற்கு உதவும் வகையில் நகைகளை வைத்து பெறும் லோன்கள் உள்ளன. இதனால் கோல்ட்லோன் பலரின் விருப்பத்தேர்வாக உள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் சிறப்பான சலுகைகளை பெற பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் உடன் அவர்கள் தரும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இது உங்களின் ஆக்கபூர்வ நிதி செயல்பாட்டிற்கு உதவியானதாக இருக்கும்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications