gold price today: அமெரிக்கா டாலரின் மதிப்பானது சற்றே தடுமாற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், சமீபத்திய நாட்களாக தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது 10 கிராமுக்கு 55,737 என்ற லெவலையும் எட்டியுள்ளது.
இதே சர்வதேச சந்தையில் விலையானது 2% ஏற்றத்தில் சுமார் 1848 டாலர் என்ற லெவலில் காணப்படுகிறது.
இந்த போக்கானது வரவிருக்கும் வாரத்தில் மீண்டும் தொடருமா? அல்லது குறையுமா? தற்போதைய விலையில் வாங்கலாமா? வேண்டாமா? அதன் முக்கிய சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல் என்ன? தற்போதைய லெவலி வாங்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய லெவல்கள்
நிபுணர்கள் கருத்துப்படி டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலையும் எட்டியுள்ளது. இது உடனடி சப்போர்ட் லெவலாக 1835 டாலர்களை தொடலாம். அப்படி அதனை தொட்டு உடைக்கும்பட்சத்தில் அடுத்த முக்கிய சப்போர்ட் ஆக 1810 டாலர்களையும் தொடலாம்.
இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 55000 ரூபாயினை எட்டலாம். இதே சர்வதேச ஸ்பாட் சந்தையில் 1860 டாலர்களையும் அதனை உடைக்கும் பட்சத்தில் 1890 டாலர்களையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். புராபிட் புக்கிங் என்பதும் இருக்கலாம். ஆக விலை குறையும்பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
அதோடு வரவிருக்கும் வாரத்தில் டாலரின் மதிப்பானது தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
2 மாத சரிவில் இருந்து ஏற்றம்
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது 2 மாத சரிவில் காணப்பட்ட நிலையில், முடிவில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இது டாலரில் புராபிட் புக்கிங் இருந்திருக்கலாம் என்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
டாலரின் மதிப்பானது 105 டாலர் என்ற லெவலில் காணப்படும் நிலையில், இந்த லெவலுக்கு மேலாக இருக்க முடியாமல் வார இறுதியில் சரிவில் காணப்பட்டது. இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலை ஏற்றம் காண காரணமாக அமையலாம். இது ஓவர் சோல்டு லெவலில் இருப்பதால் இன்னும் ஏற்றம் காணலாம்.
முக்கிய தரவுகள்
வரவிருக்கும் நாட்களில் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் முக்கிய தரவுகளானது, டாலரில் முக்கிய பங்கு வகிக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் என்பது எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
வாங்கலாம்
அதோடு வரவிருக்கும் பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்ன ஆகுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக டாலரின் மதிப்பில் எந்தளவுக்கு மாற்றம் இருக்குமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையானது குறைந்தால், அதனை நீண்டகால நோக்கில் வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
More From GoodReturns

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications