உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்து இருக்கிறது . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையை தள்ளி வைத்திருப்பதாக் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரவில்லை.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,294 டாலருக்கு விற்பனை ஆகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1.18 சதவீதம் குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 39 டாலர்கள் வரை தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது . நேற்று வர்த்தகம் முடியும் போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,341 டாலராக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கும் போதே தங்கம் விலை சரிவில் தான் தொடங்கியது.

வெள்ளி விலை பொருத்தவரை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி என்பது 36.57 டாலருக்கு விற்பனை ஆகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் 0.43 சதவீதம் குறைந்திருக்கிறது . அதே வேளையில் இந்தியாவிலும் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. காலை 9:25 மணி நிலவரப்படி பார்க்கும்போது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் ஆகஸ்ட் மாத பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட்டில் 10 கிராம் தங்கம் 96 ,193 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
நேற்று சந்தை முடியும் போது தங்கத்தின் ஆகஸ்ட் மாத பியூச்சர்ஸில் 10 கிராமின் விலை 96 , 472 ரூபாய் என இருந்தது. இன்று விலை குறைந்து 96 ,193 ரூபாய் என வர்த்தகம் தொடங்கியது . தற்போதைக்கு (9.30 மணிக்கு) 96 , 290 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்திருக்கிறது. செப்டம்பருக்கான வெள்ளி பியூச்சர்ஸ் கான்டிராக்டின் மதிப்பு 1 கிலோ 1,07,916 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று சந்தை முடியும் போது வெள்ளி பியூச்சர்ஸின் மதிப்பு 107,985 ரூபாய் என இருந்தது. நேற்றை விட குறைந்த விலையில் தான் இன்று வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை வரிவிதிப்பு நடவடிக்கையை தள்ளி வைத்திருக்கிறார். எனவே அதுவரை காத்திருக்கலாம் என முதலீட்டாளர்கள் எண்ணுவதே தற்போது தங்கத்தின் விலை குறைந்து வருவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications