ஈரான் எடுத்த முடிவால் தங்கம் விலையில் தடுமாற்றம்.. என்ன நடக்குது.. கெவின் வார்ஷ்-ன் முக்கிய கூட்டம்!

ஈரான் - ஓமான் நாடுகள் இணைந்து ஹார்முஸ் நீரிணையை நிர்வாகம் செய்யவும், தற்காலிக வழித்தடத்தில் கப்பல்களை இயக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2-3 நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ளது. இதனால் காரணமாக தங்கம் நிலையில் சர்வதேச சந்தையிலும் சரி இந்திய சந்தையிலும் சரி சரிவை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் கெவின் வார்ஷ் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நிகழ்ச்சியான ஜாக்சன் ஹோல் சிம்போசியம் நிகழச்சியில் பேச உள்ளார்.

ஈரான் எடுத்த முடிவால் தங்கம் விலையில் தடுமாற்றம்.. என்ன நடக்குது.. கெவின் வார்ஷ்-ன் முக்கிய கூட்டம்!

ஏற்கனவே நாணய கொள்கை கூட்டத்தில் பணவீக்கம் அதிகரித்தால் கட்டாயம் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவின் பணவீக்கம் ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதனால் வட்டி விகிதம் குறித்த விவாதம் உச்சத்தை எட்டியுள்ளது.

இப்படியிருக்கையில் தான் கெவின் வார்ஷ் வெள்ளிக்கிழமை பேசப்போகிறார், இவருடைய பேச்சில் பணவீக்கம், வட்டி விகிதம் தொடர்பான கருத்துக்கள் தான் தங்கம் விலையின் அடுத்தக்கட்ட உயர்வுக்கு வழிவகுக்கும்.

இன்றைய சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பதிவாகியுள்ள 3வது நாள் சரிவின் காரணமாக சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 நாள் சரிவில் இருந்து மீண்டுள்ளது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் 0.57 சதவீதம் அதிகரித்து 4620.79 டாலராகவும், வெள்ளி விலை 1.40 சதவீதம் அதிகரித்து 69.07 டாலராகவும் உள்ளது.

இதுவே இந்திய ரீடைல் சந்தையில் பார்க்கும் போது சென்னையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 77 ரூபாய் குறைந்து 16,298 ரூபாயாக குறைந்துள்ளது, 22 கேரட் 1 கிராம் தங்கம் வில் 70 ரூபாய் குறைந்து 14,940 ரூபாயாக உள்ளது. இதேபோல் மக்கள் தற்போது அதிகமாக வாங்க துவங்கியிருக்கும் 18 கேரட் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்து 12,710 ரூபாயாக உள்ளது.

மேலும் வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 265 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து 5658 ரூபாயாக உள்ளது.

இந்தியாவில் எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவின் காரணமாக அக்டோபர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தம் விலை 0.04 சதவீதம் குறைந்து 1,59,593 ரூபாயாக உள்ளது.

இதனால் தங்கம் விலையில் போக்கு ஈரான் - ஓமான் ஆகிய நாடுகள் இணைந்து எப்படி ஹார்முஸ் நீரிணையை நிர்வாகம் செய்யப்படுகிறது, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவை எப்படி சப்ளை உயர்கிறது என்ற அடிப்படையில் தான் உள்ளது.

கச்சா எண்ணெய் சப்ளை அதிகரித்தால் அதன் விலை குறைந்து பணவீக்கமும் குறையும். இதனால் டாலர் மதிப்பில் துவங்கி, பென்ச்மார்க் வட்டி விகிதம் வரையில் அனைத்தும் மாறும். இவை அனைத்தும் தங்கம் விலையில் போக்கை தீர்மானிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+