தங்கம் விலை குறையுதேன்னு சந்தோஷம் அடைவதா அல்லது கண்ணீர் விடுவதா என மக்கள் இரு பிரிவாக பிரிந்து புலம்பி வருகின்றனர். தங்கம் விலை 2.5 லட்சம் வரையில் உயரும் என கணித்துக்கு பலரும் தங்கத்தில் முதலீடு செய்திருக்கும் வேளையில் இவர்கள் அனைவரும் விலை உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதேபோல் புதிதாக தங்கம் வாங்குபவர்கள் தங்கம் விலை நிலை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும் வேளையில் இதுவும் நடக்காமல் தொடர்ந்து தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் தான் 2 நாட்கள் மந்தமாக இருந்த தங்கம் விலை இன்று காலை வர்த்தகத்தில் உயர்ந்தது. இதனால் மக்கள் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் விலையின் போக்கு என்ன..? தங்கம் விலை எந்த அளவுக்கு மாறும்..? அமெரிக்க சந்தையின் நிலைமை என்ன..? இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கான பதிலை தான் பார்க்கப்போகிறோம்.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை வெறும் 100 ரூபாய் குறைந்து 1,15,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 1,25,890 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 88 ரூபாய் குறைந்து 1,00,712 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,73,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 100 ரூபாய் உயர்ந்து 44,030 ரூபாயாக உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் பார்த்தால் காலை வர்த்தக துவக்கத்தில் உயர்வுடன் வர்த்தமானாலூம் 10.30 மணியளவில் சரிய துவங்கியது. இதனால் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,23,004.00 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தையில் சனிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலைல 4085 டாலரில் இருந்து 4107 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் 4070 டாலவர் வரையில் குறைந்துள்ளது.
இந்த அனைத்து தடுமாற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க முதலீட்டு சந்தையில் நடக்கும் தடுமாற்றம் தான்.
கடந்த இரு நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை, திங்கட்கிழமை (நவம்பர் 17) காலை தங்கம் முதலீட்டு சந்தையில் புதிய பையர்களை ஈர்த்து விலை உயர்வை கண்டுள்ளது இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (ஃபெட்) டிசம்பரில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் வாய்ப்பு குறைந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
சிஎம்இ குரூப்பின் ஃபெட்வாட்ச் கருவியின்படி, அடுத்த பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பிற்கான வாய்ப்பு 46 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த வாரம் 67 சதவீதமாக இருந்தது. இது தான் தங்கம் விலை தடுமாற்றத்திற்கான முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
மேலும் அமெரிக்காவில் நிலவும் உயர் பணவீக்கம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தரவுகளில் பதிவான மோசமான நிலை ஆகியவை ஃபெட் அமைப்பை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளையில் டிசம்பர் மாத கூட்டம் நடத்துவதற்கு முன்பு கடந்த இரு வட்டி குறைப்புகளின் தாக்கத்தை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் இந்த ஆய்வின் முடிவில் வட்டி விகிதம் குறைப்பது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும்.
ஃபெட் அதிகாரிகளின் இந்த கவனமான அணுகுமுறை, டிசம்பரில் நடக்கும் நாணயை கொள்கை கூட்டத்தில் வட்டி விகித தளர்வு எதிர்பார்ப்பை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த கடுமையான நிலைப்பாடு தாண் தங்கத்தை கடந்த வாரம் 4,245 டாலர்கள் உச்சத்திலிருந்து சரிய வைத்தது. இருப்பினும், வார இறுதியில் தங்கம் லாபம் ஈட்டியது.
மேலும் அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவர பணியக அமைப்பு செப்டம்பர் வேலைவாய்ப்பு அறிக்கையை வியாழன்கிழமை வெளியிடும் என அறிவித்துள்ளது, இது அமெரிக்காவில் நிலவிய ஷட்டவுன் காரணமாக 43 நாட்கள் தரவுகளை வெளியிடாமல் இருந்து வந்த நிலையை, தற்போது முடிவுக்கு கொண்டுவரும். இந்த அறிக்கை அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை மற்றும் ஃபெட் வட்டி பாதையை தெளிவுபடுத்தும்.
இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது அதை விற்பனை செய்து லாபம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதேவேளையில் அடுத்தடுத்து வெளியாகும் தரவுகள் அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித முடிவுகளை நேரடியாக பாதிக்கும்.
தங்கம் விலை அதிகமாக இருந்த காரணத்தால் ஆசிய சந்தையில் பலரும் தங்கத்தை வாங்காமல் இருந்து வந்தனர், ஆனால் தற்போது விலை மந்தமடைந்து இருக்கும் காரணத்தாலும், இந்தியாவில் தங்கம் விலை மீதான தள்ளுபட் அளவு 5 மாத உயர்வை எட்டியிருக்கும் காரணத்தாலும் தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை ஆசிய சந்தையிலும், இந்திய சந்தையில் அதிகரித்துள்ளனர். இதனால் காரணமாகவே தங்கம் விலை சரிவான போக்கில் இருந்தாலூம், அதிகளவிலான தடுமாற்றம் பதிவாகி வருகிறது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications