தங்கத்தை நம்பி இறங்கலாமா? கடந்த 40 ஆண்டுகளில் தங்கம் கொடுத்த ரிட்டன்ஸ் எப்படி இருந்தது?

கடந்த 7 ஆண்டுகளாக தங்கம் கொடுத்த லாபம் பிற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அப்படி 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2026-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் தங்கம் ஆண்டுக்கு 23 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த லாப விகிதம் எல்லா ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு சில ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. சில ஆண்டுகளில் மிக குறைந்த லாபமே பதிவாகியுள்ளது.

ஃபண்ட்ஸ்இந்தியா வெல்த் கன்வர்சேஷன்ஸ் என்ற நிறுவனம் செப்டம்பர் மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பணவீக்கத்தை காட்டிலும் தங்கம் அதிக லாபத்தை தந்துள்ளது என்று கூறியிருந்தது. இருப்பினும் சில முதலீடாளர்கள் பல ஆண்டுகளாக மந்தமான லாபத்தையே பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தங்கத்தை நம்பி இறங்கலாமா? கடந்த 40 ஆண்டுகளில் தங்கம் கொடுத்த ரிட்டன்ஸ் எப்படி இருந்தது?

கடந்த ஆண்டுகளில் தங்கம் கொடுத்த ரிட்டன்ஸ் எப்படி இருந்தது?:

கடந்த 10 ஆண்டுக்கான வருமானம்: 17.3%
கடந்த 20 ஆண்டுக்கான வருமானம்: 14.5%
கடந்த 30 ஆண்டுக்கான வருமானம்: 12.2%
கடந்த 40 ஆண்டுக்கான வருமானம்: 11.9%

இது ஒரு புறம் இருக்க சில மாதங்களாக தங்கத்தின் விலையை கணிக்கவே முடியவில்லை. சில நாட்களில் ஏற்றம் இருந்தது. சில நாட்கள் கடுமையாக குறைந்தது. 2026-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.13,961-ஆக இருந்தது.

Also Read

அதற்கு முந்தைய மாதம் இதே தேதியில் 1 கிராம் ரூ.12,349 ஆக இருந்தது. ஆனால் அதிலிருந்து 6 மாதங்களுக்கு முன்பு பார்த்தால் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,292-க்கு விற்பனையானது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் நல்ல வருமானத்தை வழங்கி இருந்தாலும், இடைப்பட்ட நாட்களாக முதலீட்டாளர்கள் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றனர்.

தங்கம் கொடுத்த லாபத்தை சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம். 1980 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் தங்கம் லாபம் கொடுக்கவில்லை. 0% லாபத்தையே பதிவு செய்தது. அதன் பிறகு 1989-ஆம் ஆண்டு தொடங்கி 1996-ஆம் ஆண்டு வரையில் தங்கம் கிட்டத்தட்ட 12% வளர்ச்சியை பதிவு செய்தது.

பின்னர் மீண்டும் 1996-ஆம் ஆண்டு தொடங்கி 2002-ஆம் ஆண்டு வரையில் தங்கம் எந்த லாபமும் வழங்கவில்லை. 2002-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையில் 19% லாபத்தை வழங்கியது. இதேபோன்று 2012-ஆம் ஆண்டு தொடங்கி 2019-ஆம் ஆண்டு வரையிலும் லாபம் எதுவும் இல்லை.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி 2026-ஆம் ஆண்டு வரையில் விலை அதிகரித்துள்ளது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. தங்கம் முதலீட்டாளர்களுக்கு சில ஆண்டுகள் நல்ல லாபத்தை வழங்கியுள்ளது. சில ஆண்டுகள் மந்தமான லாபத்தை வழங்கியுள்ளது.

இனி வரும் ஆண்டுகளில் எவ்வளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்?: ஃபண்ட்ஸ்இந்தியா வெல்த் கன்வர்சேஷன்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, அடுத்த 21 ஆண்டுகளில் தங்கம் பணம் வீக்கத்தை விட 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை கூடுதல் லாபம் தரும் என்று மதிப்பிட்டுள்ளது. உதாரணமாக ஒரு ஆண்டில் பணவீக்க விகிதம் 4.82 சதவீதமாக இருக்கிறது என்றால் அதில் 2 சதவீதத்தை கூட்டிக் கொள்ளுங்கள். 6.82 சதவீத லாபத்தை தங்கம் வழங்கியுள்ளது.

இந்த கணக்கீட்டை வைத்து பார்க்கும் போது ஆகஸ்ட் 2026 ஆம் ஆண்டில் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் பணவீக்கம் 4.82 சதவீதமாக இருக்கிறது. அப்படியானால் தங்கம் ஆண்டுக்கு 6.8.2% முதல் 8.82 சதவீதம் வரை வருமானம் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு நீண்ட கால கணிப்பு மட்டும் தான்.

தங்கத்தின் வரலாறை பார்த்தால் தங்கம் நல்ல உயர்வுக்குப் பிறகு பல ஆண்டுகள் லாபம் தராமலும் இருந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே முதலீட்டு காலம் என்பது மிக மிக முக்கியம். முதலீட்டாளர்கள் அதைப் பொறுத்தே முதலீடு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+